இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவரும் தங்களின் வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். வருமான வரி செலுத்துவோர் தங்களின் வருமான வரி கணக்கைத் (ITR) தாக்கல் செய்த பிறகு, அதை வருமான வரித் துறை சரிபார்க்கும். வருமான வரி செலுத்தியவர் கூடுதல் வரி செலுத்த வேண்டியுள்ளதா? அல்லது ரீஃபண்ட் தொகை செலுத்தப்பட வேண்டியுள்ளதா? என்பதை தெரிவிக்கும். எந்த மாற்றமும் இன்றி உங்கள் ITR ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும் வருமான வரித் துறை தெரிவிக்கும்.
ஜூலை மாதத்தில் நீங்கள் ITR தாக்கல் செய்து வருமான வரி ரீஃபண்ட் பெறுவதற்குக் காத்திருக்கிறீர்கள் என்றால், வருமான வரித் துறை சட்டப்பூர்வமாக வரிக் கணக்கைச் சரிபார்க்க எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம்.

முன்னாள் இந்திய வருவாய் துறை அதிகாரி மற்றும் TaxBuddy.com-இன் நிறுவனர் சுஜித் பங்கர் கூறுகையில், வருமான வரி சட்டங்கள், ITR தாக்கல் செய்யப்பட்ட மதிப்பீட்டு ஆண்டு முடிந்த 9 மாதங்களுக்குள் ITR-ஐ செயல்படுத்த வருமான வரித்துறைக்கு அனுமதியுள்ளது.
2023-2024-ஆம் (AY 2024-25) நிதியாண்டிற்கு ITR தாக்கல் செய்த ஒருவரின் கணக்கை சரிபார்க்க, வருமான வரித் துறைக்கு டிசம்பர் 31, 2025 வரை கால அவகாசம் உள்ளது. அதன் பின் அந்த நபருக்கு ரீஃபண்ட் தொகை செலுத்த வேண்டியிருந்தால் செலுத்தப்படும்.
இதே காலக்கெடு தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளுக்கும் பொருந்தும். ஒரு நபர் 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டுக்கு (AY 2024-2025) ஜூலை 31, 2024 அன்று ITR தாக்கல் செய்யத் தவறியிருந்தால், அவர் டிசம்பர் 31, 2024 அன்று அல்லது அதற்கு முன் தாமதமான ஐடிஆரைத் தாக்கல் செய்யலாம். தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கு டிசம்பர் 31, 2025-க்குள் அல்லது அதற்கு முன்னதாக சரிபார்க்கப்படும் என்று சுஜித் பங்கர் கூறியுள்ளார்.
வருமான வரி ரீபண்டுக்கான வட்டி: வருமான வரி ரீஃபண்ட் பெற விண்ணப்பிக்கும்போது வரி செலுத்துபவர் வட்டியைப் பெற தகுதியுடையவர். ஆனால் இந்த வட்டி திருப்பிச் செலுத்தப்படும் தொகையில், உண்மையான வரியில் 10 சதவீதம் அதிகமாக இருந்தால் மட்டுமே வட்டி வழங்கப்படும்.
உதாரணமாக ஒரு தனிநபரின் உண்மையான வரித்தொகை ரூ. 15,000 என வைத்துக்கொள்வோம். ஆனால் அவர் ரூ. 20,000 வரி செலுத்துகிறார் என்றால், வரி செலுத்துபவருக்கு ரூ.5,000 வருமான வரி ரீஃபண்ட் பெற உரிமை உண்டு. திருப்பிச் செலுத்தப்படும் தொகை வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்படும். ஏனென்றால், வருமான வரி ரீஃபண்ட் ரூ. 5,000 என்பது உண்மையான வரிப் பொறுப்பான 15,000 ரூபாயில் 10 சதவீதம் அதிகமாகும்.
வருமான வரி விதிகளின்படி, வருமான வரி ரீஃபண்ட் செலுத்தும்போது மாதத்திற்கு 0.5% வட்டி வழங்கப்படுகிறது. மேலும் இந்த வட்டி தொகையானது ஏப்ரல் 1 முதல் ரீஃபண்ட் பெறும் தேதி வரை கணக்கிடப்படும்.
ஐடிஆர் ஜூலை 1, 2024 இல் தாக்கல் செய்யப்பட்டு, அக்டோபர் 31, 2024 அன்று சார்பார்க்கப்பட்டால், ஏப்ரல் 2024 முதல் அக்டோபர் 31, 2024 வரை அதாவது ஏழு மாதங்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் செலுத்துவதற்கான வட்டியை வரித் துறை உங்களுக்கு வழங்கும்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications