நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்துவிட்டன. இந்த மோசடிகள் வருமான வரித் துறையையும் விட்டு வைக்கவில்லை. வருமான வரி செலுத்துவது அல்லது வருமான வரி ரீஃபண்ட் தொடர்பான போலி மெசேஜ்கள் வந்தால் எச்சரிக்கையாக இருக்கும்படி வருமான வரித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வரி செலுத்துபவர்கள், தங்கள் வருமான வரி ரீஃபண்ட் குறித்த போலி அழைப்புகள் மற்றும் மெசேஜ்களுக்கு இணங்காமல் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது.
வரி செலுத்துவோர் வருமான வரி ரீஃபண்ட் குறித்த போலி செய்தியைப் பெற்றால், அவர்கள் அதை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் என்று X-இல் IT துறை பதிவிட்டுள்ளது.

கிரெடிட் கார்டு நம்பர்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது வேறு எந்த ரகசிய தகவல்களையும் கேட்கும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்கவோ அல்லது அதில் இருக்கும் வலைத்தளங்களின் லிங்க்குகளைக் கிளிக் செய்யவோ வேண்டாம்.
வருமான வரித் துறை தேவைப்பட்டால் வரி செலுத்துபவர்களை அவர்கள் வழங்கிய மின்னஞ்சல் முகவரி மூலமாகவே தொடர்புகொள்ளும் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
எனவே வருமான வரி தொடர்பான எந்த ஒரு அழைப்பையும் ஏற்று அவர்கள் கேட்கும் விவரங்களை வழங்க வேண்டாம் என்றும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. தற்போது பலரும் வருமான வரி செலுத்தி விட்டு வரி ரீஃபண்ட் பெறுவதற்காக காத்திருக்கின்றனர். இதில் பலருக்கும் இன்னும் ரீஃபண்ட் தொகை வராமல் இருக்கிறது. எனவே ரீஃபண்ட் பெற காத்திருக்கும் நபர்களைக் குறி வைத்து தற்போது மோசடி கும்பல் போலியான செய்திகளை அனுப்பி வருகிறது. அந்தப் போலி செய்தி இவ்வாறு அனுப்பப்படலாம்.
"ரூ.15,000/- வருமான வரித் திரும்பப் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தொகை விரைவில் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். அதற்கு உங்கள் கணக்கு எண் 5XXXXX6777-ஐச் சரிபார்க்கவும். இது சரியாக இல்லை எனில், கீழே உள்ள இணைப்பைப் பார்வையிடுவதன் மூலம் உங்கள் வங்கிக் கணக்குத் தகவலை அப்டேட் செய்யவும்" என்று போலியாக அனுப்பப்படலாம்.
இதே மெசேஜ் உங்களுக்கு ஆங்கிலத்திலும் அனுப்பப்படலாம். எனவே கீழ்காணும் மெசேஜ் வந்தால் உஷாராக இருங்கள்.
"The fake message may read like this: You have been approved an Income Tax Refund of Rs, 15000/-, the amount will be credited to your account shortly, Please verify your account number 5XXXXX6777. If this is not correct, please update your bank account information by visiting the link below,"

வரி செலுத்துபவர்கள் இதுபோன்ற போலி மற்றும் மோசடி மின்னஞ்சல்களை வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு மெயில் அனுப்ப வேண்டும். [email protected] என்ற முகவரிக்கு போலியான மெசேஜ்களின் விவரங்களை வைத்து அனுப்பலாம். மேலும் இன்னொரு காபியை [email protected] என்ற முகவரிக்கு அனுப்பலாம். பிஷிங் மின்னஞ்சல் கிடைத்தால், அதை [email protected] -க்கு அனுப்புங்கள் என்று வரித் துறை தெரிவித்துள்ளது.
வரித் துறை அதிகாரிகள் எனக் கூறி பேசினாலோ அல்லது போலியாக மெசேஜ் அனுப்பினாலோ.. அந்தப் போலி இணைப்புகளை திறக்க வேண்டாம் என்று வருமான வரித் துறை வரி செலுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வரி செலுத்துபவர்கள் எந்த இணைப்புகளையும் கிளிக் செய்ய கூடாது. OTP, பாஸ்வேர்ட் அல்லது ஆதார் தகவல் போன்ற ரகசிய தகவல்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications