ஜூன் 7ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் புதிய வருமான வரி தாக்கல் இணையத் தளம் (www.incometaxgov.in ) மூலம் பழைய இணையதளம் (www.incometaxindiaefiling.gov.in) பயன்பாட்டில் இருந்து முழுமையாக நீக்கப்படும் என வருமான வரித்துறை தெளிவுபடுத்துகிறது.
இதன் மூலம் வருமான வரி செலுத்துவோருக்கும், வருமான வரித் துறை அதிகாரிகளுக்குப் பழைய வருமான வரி தளமான www.incometaxindiaefiling.gov.in பயன்படுத்த முடியாது.

இந்த மாற்றங்கள் முழுமையாகச் செய்து முடிக்க ஜூன் 1 முதல் 6ஆம் தேதி வரையில் www.incometaxindiaefiling.gov.in தளம் அதாவது பழைய வருமான வரி தாக்கல் செய்யும் தளத்தையே முழுமையாக முடக்கப்பட்டுக் காரணத்தால் பயன்படுத்த முடியாது.
இந்திய வருமான வரித் தாக்கலில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது வருமான வரித் துறை வருகிற ஜூன் 7ஆம் தேதி புதிதாக ஒரு வருமான வரி தாக்கல் செய்யும் தளத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே வருமான வரி தாக்கல் செய்ய ஒரு தளம் பயன்பாட்டில் இருக்கும் வேளையில் எதற்காக இப்புதிய தளம்..? பழைய வருமான வரி தாக்கல் செய்யும் இணையதளத்தை விடவும் புதிய வருமான வரித் தளத்தில் எளிதாக வருமான வரி மற்றும் இதர பணிகளைச் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications