மீண்டும் தீவிரமடைகிறதா ஈரான் போர்? டிரம்ப் மகளை படுகொலை செய்ய ஈரானில் பயிற்சி பெற்றவர் கைது…!!

ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பது உலகிற்கே ஆபத்தானது எனக் கூறி கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டன. பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தியது. இந்த போரில் ஈரான் நாட்டு உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். அது தவிர ஈரான் நாட்டு முக்கிய தலைவர்கள் பலரும் இந்த போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலால் கொல்லப்பட்டனர்.

கடும் கோபத்தில் இருக்கும் ஈரான் அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவிக்காமல் முரண்டு பிடித்து வருகிறது. ஈரான் போர் காரணமாக பல்வேறு நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கிடைக்காமல் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டிருக்கின்றன எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் புதிய திருப்பமாக டொனால்ட் டிரம்பின் மகளை கொலை செய்வதற்காக ஈரான் நாட்டு இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையால் பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு நபர் துருக்கியில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்.

மீண்டும் தீவிரமடைகிறதா ஈரான் போர்?  டிரம்ப் மகளை படுகொலை செய்ய ஈரானில் பயிற்சி பெற்றவர் கைது…!!

கடந்த 15ஆம் தேதி முகம்மது பகீர் சாத் தாவூத் அல் சாதி என்பவரை துருக்கியில் கைது செய்து இருக்கின்றனர். அவர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்பை படுகொலை செய்வதற்காக பயிற்சி பெற்றவர் என்பது தெரிய வந்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை தலைவராக இருந்த காசில் சுலைமானி படுகொலை செய்யப்பட்டார். அதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் இந்த நபர் டிரம்ப் மகளை படுகொலை செய்வதற்காக திட்டமிட்டது தெரிய வந்திருக்கிறது.

Also Read

கைது செய்யப்பட்ட அந்த நபரிடமிருந்து இவாங்கா டிரம்பின் ஃபுளோரிடா வீடு தொடர்பான ப்ளூ பிரிண்ட் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டு இவர் எக்ஸ் பக்கத்தில் இவான்காவின் இல்லத்தை குறிப்பிட்டு பழிவாங்கப் போவதாக பதிவு செய்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இவாங்கா டிரம்ப் முந்தைய டிரம்ப் ஆட்சியில் டிரம்பின் முக்கிய ஆலோசகராக பதவி வகித்தவர்.

Recommended For You

இதற்கிடையே ஈரான் போருக்கு முடிவு கிடைக்காமல் இருக்கிறது இரண்டாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடக்குமா இல்லையா என்பது கூட தெரியவராத சூழலில் டிரம்ப் நிர்வாகம் மீண்டும் ஈரான் மீது தீவிர தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி விட்டது. இது நடந்தால் உலக அளவில் கச்சா எண்ணெய் சப்ளை இன்னும் பாதிக்கப்படும், மேலும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பெட்ரோல் டீசல் விலைகள் இன்னும் அதிகரிக்க செய்யும்.

இதனால் பல்வேறு நாடுகளிலும் கோடிக்கணக்கான மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாவார்கள். இந்த சூழலில் அரபு நாடுகள் ஈரானும் அமெரிக்காவும் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக அழுத்தம் கொடுத்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+