ஜம்மு : மோசமாக பராமரிக்கப்படும் சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என கூறுவது தவறு என்று ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கான உயர் நீதிமன்றம் மோசமாக பராமரிக்கப்பட்டு வரக்கூடிய தேசிய நெடுஞ்சாலை என்ஹெச்- 44இல் செயல் படக்கூடிய சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை குறைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்டுமான பணிகள் காரணமாக சாலைகள் மோசமாக இருக்கிறது எனும் போது அந்த வழியே பயணம் செய்யும் வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உத்தரவையும் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உடனே இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்றும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஜம்மு காஷ்மீர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதிபதி தலைமையிலான அமர்வு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு தேசிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பதான் கோடி முதல் உத்தம்பூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் டெல்லி- அமிர்தசரஸ்- கத்ரா விரைவு சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் இந்த விரைவு சாலையுடன் இணைக்கும் ஜம்மு பதான் கோட் நெடுஞ்சாலையில் லகான்பூர் மற்றும் பான் ஆகிய பகுதிகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
அதன்படி மக்களிடமிருந்து பணம் வசூலிக்கும் ஒரே குறிக்கோளுடன் காளான்கள் போல சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன என குறிப்பிட்ட அவர்கள் சுங்கச்சாவடி கட்டணங்களால் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் தனியார் ஒப்பந்ததாரர்களும் பெருமளவில் பணத்தை குவிக்கின்றனர் ஆனால் சாலைகள் அதற்கேற்ற தரத்துடன் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பினர்.
மக்களிடம் பணம் வசூல் செய்வதை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படக்கூடாது என்றும் சுங்க கட்டணங்கள் நியாயமானதாக இருக்க வேண்டும் என்றும் கூறினர். ஜம்மு காஷ்மீரில் லகான்பூர் , பான் சுங்கச்சாவடிகளில் தற்போது இருக்கும் கட்டணத்தில் 20% மட்டுமே சுங்க கட்டணமாக வசூல் செய்ய வேண்டும் என்றும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் அறிவித்தனர்.
மேலும் சுயமான ஆய்வாளர்களைக் கொண்டு சுங்க கட்டணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஜம்மு காஷ்மீரில் என்ஹெச் - 44 நெடுஞ்சாலையில் 60 கிலோ மீட்டர் இடைவெளியில் சுங்கச்சாவடிகள் இருக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் தெரிவித்துள்ளனர். அப்படி ஏதேனும் இருந்தால் இரண்டு மாதங்களுக்குள் கூடுதலாக இருக்கக்கூடிய சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு மாநிலங்களிலும் சுங்க கட்டணங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது, இந்த சூழலில் ஜம்மு காஷ்மீரின் இந்த உத்தரவு மக்களுக்கு சாதகமானதாக அமைந்துள்ளது. பல்வேறு மாநில நீதிமன்றங்களும் இந்த உத்தரவை முன்னோடியாக கொண்டு வழக்குகளில் தீர்ப்பு வழங்கலாம்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications