சமுக வலைத்தளம் உலகம் முழுவதும் இணைக்கும் பாவமாக இருப்பதை தாண்டி தற்போது பெரிய வர்த்தக தளமாக மாறியுள்ளது, யார் எதை பேச வேண்டும் என்பதில் இருக்கும் கட்டுப்பாடுகள் முதல் வருமானத்தை எப்படியெல்லாம் அதிகரிக்கலாம் என்பது வரையில் சமுகவலைத் தளங்கள் பெரிய அளவில் மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் யார் மக்களுக்கு பாதுக்காப்பான சிறந்த தளத்தை உருவாக்குகிறார்கள் என்பதில் தற்போது பெரும் போட்டி உருவாகியிருக்கும் வேளையில், பல வருடமாக சமுக வலைத்தள வர்த்தகத்தில் இருந்து ஒதுங்கி நின்ற டிவிட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி புதிய தளத்தை அறிமுகம் செய்துள்ளார்.
இதே நேரத்தில் தற்போது எலான் மஸ்க் கட்டுப்பாட்டிற்குள் வந்த டிவிட்டர் தளம் பல ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு முடங்கியுள்ளது.
ஜாக் டோர்சி
டிவிட்டர் இணை நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் டோர்சி மீண்டும் சமுக வலைத்தள துறையில் இறங்கியுள்ளார். ட்விட்டர் தளத்திற்கு மாற்றாக ப்ளூஸ்கி ( Bluesky ) எனப்படும் புதிய தளத்தை அறிமுகம் செய்துள்ளார். தற்போது வெறும் சோதனை கட்டத்தில் இருக்கும் Bluesky ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வாடிக்கையாளர் பயன்பாட்டுக்கு கிடைக்கிறது.
Bluesky அறிமுகம்
ட்விட்டர் நிதியுதவி உடன் துவங்கப்பட்ட Bluesky 2019ல் தனி திட்டமாகவும், தனி நிறுவனமாகவும் இயங்கி வந்தது. Bluesky சிறப்பு என்னவென்றால் decentralized social network தான். ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருக்கும் Bluesky செயலியை தற்போது அழைப்பிதழ்களுக்கு மட்டுமேயான பீட்டா வெர்ஷன் ஆக கிடைக்கிறது. மேலும் இந்த செயலி விரைவிஸ் பொது தளத்தில் அனைவருக்குமான தளமாக அறிமுகம் செய்ய உள்ளது.
2,000 இன்ஸ்டால்
மொபைல் ஆப் நுண்ணறிவு நிறுவனமான data.ai இன் படி, ப்ளூஸ்கி iOS ஆப் பிப்ரவரி 17 அன்று அறிமுகமானது மற்றும் சோதனை கட்டத்தில் சுமார் 2,000 இன்ஸ்டால்களை பெற்றுள்ளது. இந்த ஆப் எளிமையான யூசர் இன்டர்பேஸ்-ஐ அளிக்கிறது. இத்தளத்தில் ஒருவர் 256 எழுத்துகள் கொண்ட பதிவை உருவாக்கலாம், அதில் புகைப்படங்களும் அடங்கும்.
13 மில்லியன் டாலர் முதலீடு
2019 முதல் டிவிட்டர் முதலீட்டில் தனி திட்டமாக இயங்கி வந்த Bluesky 2022 ஆம் ஆண்டு தான் அதிகாரப்பூர்வ நிறுவனமாக உருவாகியுள்ளது, கடந்த ஆண்டு மட்டும் BlueSky சுமார் 13 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை பெற்றுள்ளது.
டிவிட்டர் முடக்கம்
இணையதளம், செயலிகள் செயலிழப்புகளைக் கண்காணிக்கும் தளமான Downdetector.com படி, புதன்கிழமை பல பயனர்களுக்கு ட்விட்டர் தளம் செயலிழந்தது காணப்பட்டது. டவுன்டெக்டரில் டிவிட்டர் தளம் செயலிழப்பு குறித்து புகாரளிக்கப்பட்ட எண்ணிக்கை பிற்பகல் 3:30 மணியளவில் அதிகரித்தது மற்றும் சுமார் ஒரு மணிநேரம் வேகமாக வளர்ந்தது, அதன் பின்பு படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு திருப்பியுள்ளது.
இந்தியா
இந்தியா உட்பட உலகளவில் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு டிவிட்டர் தளத்தை பயன்படுத்த முடியாமல் போய் உள்ளது. டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் அதிக எண்ணிக்கையிலான செயலிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக டவுன்டெக்டர் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications