உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிச் சென்னை-ஐ சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் தலைமையிலான குழு வாயிலாக டிவிட்டரில் பல மாற்றங்களைச் செய்து மக்களுக்கு மேம்பட்ட தளமாக உருவாக்குவது மட்டும் அல்லாமல் வருவாய் ஈட்டும் வகையில் பல புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறார்.
இந்த நிலையில் டிவிட்டருக்குப் போட்டியாக டிவிட்டர் நிறுவனரும், முன்னாள் சிஇஓ-வுமான ஜாக் டோர்சி புதிதாக ஒரு சமுக வலைத்தள நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
சமுக வலைத்தளம்
உலகளவில் அனைத்து முன்னணி சமுக வலைத்தள நிறுவனங்களும் மோசமான நிலையை எட்டி வரும் நிலையில் ஜாக் டோர்சி இதுவரையில் யாரும் செய்திடாத வகையில் புத்தம் புதிய ஐடியா உடன் தனது புதிய சமூகவலைத்தள நிறுவனத்தை உருவாக்கி வருகிறார்.
ஜாக் டோர்சி
டிவிட்டர் மூலம் சமுக வலைத்தளத்தில் பெரும் புரட்சியை உருவாக்கிய ஜாக் டோர்சி தான் உருவாக்கிய நிறுவனத்தில் இருந்தே வெளியேறி புதிய சமுக வலைத்தள நிறுவனத்தை உருவாக்கியுள்ளார், இதை விட முக்கியமாக எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கி டிவிட்டர் மூலம் புதிய உச்சத்தை அடைய வேண்டும் எனத் திட்டமிட்டு இருக்கும் நிலையில் ஜாக் டோர்சி-யின் புதிய சமுக வலைத்தளம் பெரும் போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளாக்செயின் தொழில்நுட்பம்
ஜாக் டோர்சி பிளாக்செயின் தொழில்நுட்பம் அடிப்படையிலான Bluesky என்னும் சமூகவலைத்தளத்தை உருவாக்கி வருகிறார், இந்தத் தளம் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்காகக் கொண்டு வரப்படும் என அறிவித்த ஜாக் டோர்சி பீட்டா டெஸ்டிங்-கிற்குத் திறந்தார். வெறும் இரண்டு நாளில் 30000 பேர் இத்தளத்தில் பீட்டா டெஸ்டிங்கிற்குச் சேர்ந்துள்ளனர்.
Bluesky தளம்
ப்ளூஸ்கை தளத்தின் மூலம் சமூக வலைத்தளத்திற்குப் புதிய அடையாளம் அளிக்கப்பட உள்ளது, கிரியோட்டர்களுக்குப் பிளாட்பார்ம்-ல் சுதந்திரம், டெவலப்பர்களுக்குத் தனிச் சுதந்திரம், வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் அனுபவம் பெறும் சுந்திரம் அளிக்கப்பட உள்ளது. இத்தளத்தின் முக்கியமான விஷயம் என்னவென்றால் அல்காரிதம் நிர்வாகம் செய்யும் AT Protocol-ஐ வாடிக்கையாளரே தீர்மாணித்திக்கொள்ள முடியும்.
open மற்றும் decentralized சமூகவலைத்தளம்
2019ல் ஜாக் டோர்சி டிவிட்டர் open மற்றும் decentralized சமூகவலைத்தளத்தை உருவாக்க முதலீடு செய்துள்ளதாக அறிவித்தார். சமீபத்தில் டிவிட்டர் கைப்பற்றல் திட்டத்தின் போது ஜாக் டோர்சி மற்றும் எலான் மஸ்க் மத்தியிலான ஆலோசனைக்கு மத்தியில் ஜாக் டோர்சி தற்போதைய சூழ்நிலையில் புதிய சமூகவலைத்தளம் தேவை எனத் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் - ஜாக் டோர்சி
இதேபோல் டிவிட்டரை கைப்பற்ற எலான் மஸ்க்-கிற்கு முதன் முதலில் ஆதரவு அளித்ததே ஜாக் டோர்சி தான், இதேபோல் ஜாக் டோர்சி டிவிட்டரின் சிஇஓ பதவி வேண்டாம் என வெளியேறிய பின்பு இந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான பராக் அகர்வால் நியமிக்கப்பட்ட போது, எலான் மஸ்க் தனது டிவிட்டரில் ஜாக் டோர்சி-க்குத் திரோகம் செய்யப்பட்டதாகச் சர்வாதிகாரி ஸ்டாலின் போட்டோ பகிர்ந்தார்.
எலான் மஸ்க்
இதைத் தொடர்ந்து டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் என 5 நிறுவனங்களுக்குத் தலைவரான எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தைச் சுமார் 46.5 பில்லியன் டாலர் செலவில் 100 சதவீத பங்குகளையும் கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வாக அலுவலகத்திற்கு வரும் முன்னரே 5 உயர் அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்தார்.


Click it and Unblock the Notifications