சீனா-வின் மிகப்பெரிய ஈகாமர்ஸ், டெக் சேவை நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் நிதி சேவை பிரிவான Ant Groupல் நிறுவனத்தின் அனைத்து நிர்வாகப் பதவிகள், பொறுப்புகளில் இருந்து அதன் நிறுவனர் ஜாக் மா வெளியேறியுள்ளார்.
சீனா நிதியியல் சேவை துறையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் மூலம் மக்களுக்கு அரசு வங்கிகளின் தேவையைக் குறைக்கும் அளவிற்குப் பெரும் மாற்றத்தை உருவாக்க வித்திட்டவர் ஜாக் மா.
இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ஜாக் மா சீனா நாட்டு வங்கி சேவைகளையும், அதன் நிர்வாக அதிகாரிகளையும் விமர்சனம் செய்து பேசினார், அவ்வளவு தான்.. சீனா அரசு ஜாக் மா-வை சுத்தி சுத்தி அடிக்கத் துவங்கியது.
சீனா
சீனாவில் ஈகாமர்ஸ், டெக், சப்ளை செயின், டிஜிட்டல் நிதி தேவை எனப் பல முக்கியப் பிரிவுகளின் வளர்ச்சிக்கும் துவக்கத்திற்கும் ஜாக் மா-வின் அலிபாபா குழுமம் முக்கியக் காரணமாக இருந்தது என்றால் மிகையில்லை.
ஜாக் மா
இந்த நிலையில் ஜாக் மா-வின் அரசு அமைப்புக்கு எதிரான பேச்சுக்கு பின்பு உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த ஆன்ட் குரூப் ஐபிஓ தடை வெளியாவதற்குச் சில நாட்களுக்கு முன்பு தடை செய்தது சீன அரசு, இது மட்டுமா ஜாக் மா-வின் ஆலிபாபா, ஆன்ட் குரூப் என அனைத்து நிறுவனங்களையும் அரசு கண்காணிப்புக்குக் கொண்டு வந்து மோனோபோலி, நிதி மோசடி எனப் பல குற்றத்திற்காக இரு நிறுவனங்களின் மொத்த நிர்வாகத்தையும் சீன அரசு கையில் எடுத்தது.
வீட்டுச் சிறை
இதற்கிடையில் ஜாக் மா பல மாதங்கள் சீனாவில் தனது அதிகாரப்பூர்வமற்ற நடவடிக்கையாக வீட்டுச் சிறையில் வைத்தது சீன அரசு. மேலும் சீன அரசு செய்த ஆய்வில் சுமார் 10.5 பில்லியன் யுவான் அபராதம் விதித்தது.
அலிபாபா குழுமம்
இந்த நிலையில் ஜாக் மா தனது பங்கு இருப்பைப் பல முறை மறுசீரமைப்பு செய்த நிலையில் அலிபாபா குழுமத்தில் இருக்கும் ஆன்ட் குரூப் பங்கு இருப்பு, வாக்களிக்கும் உரிமை என அனைத்தையும் இழந்துள்ளார்.
ஆன்ட் குரூப்
ஜாக் மா ஆன்ட் குரூப்-ல் மட்டும் சுமார் 50 சதவீத பங்குகளை வைத்திருந்தார், தற்போது 6.2 சதவீதம் வரையில் குறைந்து வெறும் பங்கு உரிமையாளராக மட்டுமே உள்ளார், இந்தப் பங்கு இருப்பு உடன் நிர்வாகக் குழுவில் கூட இடம் கிடைக்காத நிலை தான் உள்ளது.
ஜப்பான்
இதேவேளையில் கடந்த 2 வருடமாக வெளியுலகத்திற்கு வராமல் இருந்த ஜாக் மா தற்போது சீனா-வை விட்டு வெளியேறி ஜாப்பானில் குடும்பத்துடன் 6 மாதமாக வாழ்ந்து வருகிறார், சமீபத்தில் ஜப்பானில் ஜாக் மா இருக்கும் புகைப்படம் வைரலானது.


Click it and Unblock the Notifications