புதுக்கோட்டையில் பலாப்பழ விளைச்சல் அமோகம்.. ஆனாலும் கவலையில் விவசாயிகள்.. ஏன் தெரியுமா?

புதுக்கோட்டையில் இந்த ஆண்டு பருவ மழை காரணமாக மிக அதிகமாக பலாப்பழ விளைச்சல் கிடைத்துள்ளது. ஆனால், அதிக அளவிலான விளைச்சல் காரணமாக, சந்தையில் பலாப்பழங்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கவலைக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த ஆண்டுகளில் 10 கிலோ பலாப்பழம் ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 10 கிலோவுக்கு 100 ரூபாய் கூட கிடைப்பது அரிதாக உள்ளது என்று கவலைத் தெரிவித்துள்ளனர்.

கீரமங்கலம், வடகாடு, கைகாட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பலாப்பழம் தரம் மற்றும் சுவைக்கு பெயர் பெற்றது. இதன் தனித்துவமான சுவை காரணமாக வெளிநாடுகளில் இருந்தும் பலர் இங்கு கிடைக்கும் பலாப்பழங்களை ஆர்டர் செய்கின்றனர்.

 புதுக்கோட்டையில் பலாப்பழ விளைச்சல் அமோகம்.. ஆனாலும் கவலையில் விவசாயிகள்.. ஏன் தெரியுமா?


ஆனால் அதிக விளைச்சல் காரணமாக, ஒரே நேரத்தில் பலரும் சந்தையில் விற்பனை செய்ய தொடங்கியதால் பலாப்பழங்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதன் காரணமாக 80 சதவீதம் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள விவசாயிகள் கூறுகின்றனர்.

இது குறித்து கீரமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி எஸ்.குமாரவேலு கூறுகையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் எதிர்பார்த்ததை விட மகசூல் கிடைத்துள்ளது. "பழங்கள் சீசன் இல்லாத நேரத்திலும் நன்றாக காய்த்துள்ளன" என்று கூறியுள்ளார்.

மேலும் பலாப்பழங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் பழுத்து விட்ட காரணத்தினால் சந்தையில் பெரும்பாலானோர் தாங்கள் உற்பத்தி செய்த பலாப்பழங்களை விற்க முயற்சித்துள்ளனர். இதன் காரணமாகவே விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் போக்குவரத்து செலவுகளை கூட விற்ற விலையில் ஈடு செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய வியாபாரி பன்னீர்செல்வம், விவசாயிகள் ஏற்கனவே பழுத்த நிலையில் உள்ள பலாப்பழத்தை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். மேலும், வழக்கமாக எங்கள் விளைபொருட்களை எடுத்துச் செல்லும் கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள், அங்கு பெய்த மழையின் காரணமாக கொள்முதல் செய்யவில்லை. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்ய போதிய வசதிகளை மாநில அரசு ஏற்படுத்தி தரவும், இப்பகுதியில் பலாப்பழம் சார்ந்த தொழில் வளர்ச்சிக்கு உதவவும் கோரியுள்ளார்.

புதுக்கோட்டையில் உள்ள மரங்களின் மூலம் ஆண்டுக்கு 1.4 லட்சம் டன் பழங்கள் கிடைக்கிறது. இதில் 1.3 லட்சம் டன் மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மாவட்ட தோட்டக்கலைத் துறை, கிருஷி விக்யான் கேந்திரா மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து, இங்குள்ள மரங்கள் குறித்து அறிவியல் ஆய்வு செய்து, சிறந்த வர்த்தகத்திற்கான பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்றும் அங்குள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+