டெல்லி: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பீகார் மாநிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
2025-26 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் பெரும்பாலான திட்டங்கள் பீகார் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டன.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு உதவியாக இருந்தது பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் கட்சி தான். எனவே மத்திய அரசு பீகார் மாநிலத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதுமட்டுமின்றி பீகார் மாநிலத்தில் நடப்பாண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பீகார் மாநிலத்தை கவனத்தில் கொண்டு நிதி அமைச்சர் பிரத்தியேக திட்டங்களை அறிவித்தார்.
பீகாரில் மக்கானா வாரியம்: சர்வதேச அளவில் மக்கானா எனப்படும் தாமரை விதைகளுக்கு டிமாண்ட் அதிகரித்து வருகிறது. எனவே மக்கானாவிற்கான சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனை கவனத்தில் கொண்டு மத்திய அரசு பீகாரில் மக்கானா வாரியம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. பீகார் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்த நிர்மலா சீதாராமன், மக்கானா விதைகள் உற்பத்தி, செயலாக்கம், மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை இந்த வாரியம் மேற்கொள்ளும் என கூறினார்.
உணவு தொழில்நுட்ப நிறுவனம்: பீகார் மாநிலத்தில் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது கிழக்கு இந்தியாவில் உணவு பதப்படுத்துதலை ஊக்குவிக்கும் என நிதி அமைச்சர் கூறினார். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கவும் இது உதவும் என தெரிவித்தார்.
ஐஐடி விரிவாக்கம்: பீகார் மாநிலம் பாட்னாவில் இருக்கும் ஐஐடி விரிவாக்கம் செய்யப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
விமான நிலையம்: இந்தியாவில் விமான தேவைகள் அதிகரித்து வருவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிரீஃன்பீல்ட் விமான நிலையங்கள் நிறுவப்படும் என்றார். இதன் ஒரு பகுதியாக பாட்னா விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்தார்.
பீகாரின் மிதிலாஞ்சல் பகுதியில் மேற்கு கோசி கால்வாய் திட்டம் செயல்படுத்த நிதி உதவி வழங்கப்படும் என்றார். புத்தரின் வாழ்க்கை மற்றும் காலங்கள் தொடர்பான இடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் பீகார் மாநிலத்தின் பாரம்பரிய சேலையை உடுத்தி வந்திருந்த்து குறிப்பிடத்தக்கது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற உடனே ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது கூட மத்திய அரசு கூட்டணியில் இருக்கும் பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்தது.
freelancer - Devika
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications