இந்தியாவில் ஐடி நகரமான பெங்களூர் நீண்ட கால அடிப்படையில் இந்நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு போக்குவரத்து நேரத்தை குறைக்க அடுத்தடுக்கு மெகா கட்டுமான திட்டத்தை கையில் எடுத்து வருகிறது கர்நாடக அரசு. இதில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மஞ்சள் லைன் மற்றும் ஹெப்பால் மேம்பாலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது மட்டும் அல்லாமல் பயண நேரத்தை குறைத்துள்ளது.
இந்த நிலையில் அடுத்தக்கட்டமாக தெற்கு பெங்களூர் பகுதியில் போக்குவரத்து அமைப்பில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், நம்ம மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தை அத்திப்பள்ளி வரை நீட்டிக்கும் திட்டத்தை கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது.

கர்நாடக துணை முதலமைச்சரும், பெங்களூரு நகர வளர்ச்சித் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், சட்டமன்றத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த மஞ்சள் லைன் மெட்ரோ சேவை நீட்டிப்பு, ஓசூர் சாலையில் உள்ள டிராபிக்-ஐ குறைக்க உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
சமீபத்தில் தொடங்கப்பட்ட ஆர்.வி.சாலை முதல் பொம்மசந்திரா வரையிலான மஞ்சள் வழித்தடத்தில் தற்போது தினமும் சுமார் 90,000 பயணிகளை பயணம் செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த வழித்தடத்தை மேலும் 10-11 கிலோமீட்டருக்கும் தொலைவுக்கு நீட்டிப்பது மூலம் தமிழ்நாட்டு எல்லை பகுதியான ஓசூர் வரையில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்த முடியும்.
கர்நாடக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, காங்கிரஸ் எம்எல்ஏ பி.சிவண்ணா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது, அம்மாநில துணை முதலமைச்சர் சிவகுமார், அத்திப்பள்ளி வரையில் மஞ்சள் லைன் விரிவாக்க திட்டத்தைப் பற்றி விரிவாகப் பேசினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சிவண்ணா இந்த விஷயத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் கூறினார். சிவண்ணா-வின் கோரிக்கையின்படி, மெட்ரோ வழித்தடத்தை மேலும் 10-12 கிலோமீட்டர் தொலைவுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அவர் விளக்கினார்.
மேலும், அத்திப்பள்ளி அருகில் 90,000 இருக்கைகள் கொண்ட புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் மற்றும் விளையாட்டு அரங்கம் சுமார் 100 ஏக்கரில் அரசு கட்ட முடிவு செய்துள்ளதால், மெட்ரோ சேவை விரிவாக்கம் மிகவும் அவசியமாகிறது.
இதை தொடர்ந்து பேசிய டி.கே.சிவகுமார் பெங்களூரு மெட்ரோ இரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL), மஞ்சள் வழித்தடத்தை அத்திப்பள்ளி வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருகிறது. இந்த நீட்டிப்பு, ஜிகாணி மற்றும் பன்னேருகட்டா வழியாக செல்லும் வகையில் திட்டமிடப்பட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த ஆய்வை ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆர்.வி.அசோசியேட்ஸ் நிறுவனம் செய்ய உள்ளது. இந்த ஆய்வு முடிந்த பிறகு, கர்நாடக அரசு முடிவெடுக்கும் என்று துணை முதலமைச்சர் தெரிவித்தார்.
பெங்களூர் நகரத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சி என்பது மெட்ரோ சேவையின் விரிவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தான் இருக்கும் என அரசு தீவிரமாக நம்புகிறது. இதற்காவே பெங்களூர் நகரின் நிர்வாகத்தை 4 பகுதிகளாக பிரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மஞ்சள் லைன் மெட்ரோ அத்திப்பள்ளி வரையில் நீட்டிக்கப்பட்டால் தமிழ்நாட்டு எல்லை பகுதியான ஓசூர் மக்களுக்கு பெரும் நன்மை கிடைக்கும். உதாரணமாக பல மக்கள் பெங்களூரில் வாடகை வீடு எடுக்காமல் ஓசூரில் தங்கி தினமும் மெட்ரோ வாயிலாகவே பயணிக்கலாம், வெளியூரில் இருந்து வரும் மக்கள் அத்திப்பள்ளியில் இறங்கி மெட்ரோ வாயிலாக அவர்கள் வீட்டுக்கு விரைவாக செல்ல முடியும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications