உலகம் முழுவதும் ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்து வரும் நிலையில், இந்திய ஐடி சேவை துறையின் நிலை என்ன என்ற கேள்வி அனைவருக்குமே இருக்கும் நிலையில் தற்போது இதற்கான விடை கிடைத்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் இந்தியா ஐடி சேவை துறைக்குப் பொற்காலமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. ஏன் தெரியுமா..?
இந்திய ஐடி துறை 2022
இந்தியாவில் அடுத்தடுத்து பல்வேறு டிஜிட்டல் மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் பணிநீக்கத்தை அறிவித்து வரும் நிலையில், 2022 ஆம் ஆண்டில் இந்திய ஐடி நிறுவனங்கள் நேரடியாகப் பணிநீக்கம் என அறிவிக்காவிட்டாலும் முன்லைட்டிங் காரணமாகச் சில ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது, லாபத்தை அதிகரிக்க ஓரிரு காலாண்டில் ஊழியர்களுக்கான வேரியபிள் பே குறைவாகக் கொடுத்தது, பலருக்கு பணிநியமன கடிதம் அளித்தாலும் நிறுவனத்தில் சேரும் நாள் அறிவிக்கப்படவில்லை இதன் வாயிலாக அதிகப்படியான ஐடி ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.
160 பில்லியன் டாலர் திட்டம்
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 160 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி திட்டங்களின் ரினிவல் செய்யப்பட உள்ளது. இந்த ரினிவல் செய்யப்படும் காலத்தில் பொதுவாக ஐடி நிறுவனங்களின் சேவையில் திருப்தி அடையாத வாடிக்கையாளர் வேறு நிறுவனங்களைத் தேடிச் செல்வது வழக்கம்.
புதிய திட்டங்கள்
ஆனால் இந்த முறை இந்த 160 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி சேவை ரினிவல் திட்டத்தின் மூலம் இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகப்படியான பலன் அடையும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் இந்த ரினிவல் காலத்தில் 100 - 500 மில்லியன் டாலர் மதிப்பிலான பல வருடத் திட்டங்களைப் பெறவும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
டெக் சேவை
உலகளவில் தற்போது அனைத்துத் துறை சார்ந்த நிறுவனங்களும் டெக் சேவை வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் நிலையில், செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதிலும் குறியாய் உள்ளது. இந்த நிலையில் குறைந்த விலையில் சிறப்பான சேவை அளிக்கும் நிறுவனங்கள் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற வாய்ப்பு உள்ளது, இதனால் இந்தியா ஐடி சேவை நிறுவனங்களுக்கு ஜாக்பாட் தான்.
இந்தியா ஐடி சேவை நிறுவனங்கள்
சர்வதேச ஐடி சேவை சந்தையில் மலிவான டெக் மற்றும் டிஜிட்டல் சேவை வழங்குவதில் இந்திய ஐடி நிறுவனங்கள் முன்னோடியாக இருக்கும் நிலையில் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ரீனிவல்-க்கு வரும் 160 பில்லியன் டாலர் திட்டங்களில் வங்கி மற்றும் ரீடைல் சேவை திட்டங்கள் அதிகமாக இருக்கும் எனவும் தெரிகிறது.
ரீனிவல் திட்டம்
இந்த 160 பில்லியன் டாலர் ரீனிவல் திட்டத்தில், பெரும்பாலான திட்டங்கள் அமெரிக்க நிறுவனத்தில் இருந்து தான் அளிக்கும், இதேபோல் குறிப்பிட்ட அளவு திட்டங்கள் ஐரோப்பா மற்றும் ஆசிய பசிபிக் சந்தையில் இருந்து வரும் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது.
2023 முதல் காலாண்டு
இந்த 2023 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் வரும் ரீனிவல் திட்டங்கள் மட்டும் இந்திய ஐடி சேவை நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைந்துவிட்டால் இந்திய ஐடி துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுவது மட்டும் அல்லாமல் பணிநீக்கம் குறித்த அச்சம் இருக்காது.
ஐடி ஊழியர்கள் வாய்ப்பு
அதேபோல் மீண்டும் ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகரித்து டாப் 5 ஐடி சேவை நிறுவனங்கள் மத்தியில் ஊழியர்களை ஈர்க்கும் நிலை உருவாக வாய்ப்பு அதிகம். இதனால் ஐடி ஊழியர்கள் மீண்டும் அதிகச் சம்பளத்தில் வேலைவாய்ப்புகளைப் பெற வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications