ஹெச்1பி விசா விதிமுறைகளை மாற்றியது அமெரிக்க அரசு… இந்தியர்களுக்கு என்ன பயன்?

பெரும்பாலான இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் பயன்படுத்தக்கூடிய ஹெச்1பி விசா திட்டத்தில் அமெரிக்க அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இது இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு பயனளிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்காவுக்கு சென்று பணி புரிவதற்கு பெரிய அளவில் பயன்படுத்தக்கூடிய ஒரு விசா தான் ஹெச்1பி. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படக்கூடிய சிறப்பு வேலைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த முடியும். இதனை புலம்பெயர்ந்தோர் அல்லாத விசா என கூறலாம்.

 ஹெச்1பி விசா விதிமுறைகளை மாற்றியது அமெரிக்க அரசு… இந்தியர்களுக்கு என்ன பயன்?

2023 ஆம் ஆண்டில் இந்த விசா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 3,86,000 விசாக்களில் 72.3% இந்தியர்களுக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அரசு இந்த விசா விதிமுறைகளில் பல மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது.

ஹெச்1பி விசா திட்டத்தை நவீனமயமாக்குவதை நோக்கமாக கொண்டு இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனவரி 17ஆம் தேதியிலிருந்து இந்த மாற்றங்கள் அமலுக்கு வர இருக்கின்றன.

எஃப்1 விசாவில் அமெரிக்காவிற்கு சென்று கல்வி பயின்றவரும் மாணவர்கள் தங்களுடைய விசா நிலையை அங்கு இருக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை பெற்றுவிட்டு எளிதாக ஹெச்1பி விசாவாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு முன்பு இதற்கான நடைமுறைகள் சிக்கலாக இருந்த நிலையில் அவை எளிமையாக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஹெச்1பி விசா பெற்று அமெரிக்காவில் பணியில் இருப்பவர்கள் அவற்றை நீட்டிக்க வேண்டுமெனில் நீண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டி இருந்தது. மீண்டும் நேர்காணல் நடத்துவது, ஆவண சரிபார்ப்பு என இருந்த நீண்ட நடைமுறைகள் தற்போது சுருக்கப்பட்டுள்ளன. எனவே விசாவை நீட்டிக்க கோருபவர்கள் இனி எளிமையாக அதனை பெறலாம்.

ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவிற்கு வரக்கூடியவர்கள் அரசு விதித்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யக் கூடியவராக இருக்க வேண்டும் அவ்வாறு இல்லை எனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 17ஆம் தேதியிலிருந்து இந்த விசாவிற்கு புதிய விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றும் அதைதான் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது.

தற்போது லாட்டரி சிஸ்டம் முறையில் தான் ஹெச்1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதனை நிறுவனங்கள் தவறான முறையில் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தாங்கள் படித்த படிப்பு தாங்கள் வரக்கூடிய வேலைக்கு பொருத்தமானது என்பதை விண்ணப்பதாரர்கள் நிரூபிக்க வேண்டும் என்றும் இந்த புதிய விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹெச்1பி விசா திட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஹெச்1பி விசா வேண்டி விண்ணப்பம் செய்தவர்கள் தங்களுடைய அப்பாயின்மென்ட்டை மாற்றும்போது கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் இந்த புதிய விதிமுறையின் படி முதல் முறை அப்பாயிண்ட்மெண்ட் நேரத்தை மாற்றி அமைக்கும்போது எந்த கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. ஆனால் ஒரு முறைக்கு மேல் தங்களுடைய அப்பாயிண்ட்மெண்ட் நேரத்தை மாற்றும் போது கட்டணம் செலுத்தியாக வேண்டும். இது ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+