இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி. இவருடைய இளைய மகன் தான் ஆனந்த் அம்பானி. இவருக்கு விலங்குகள் பராமரிப்பில் ஆர்வம் ஆதிகம். இவர் குஜராத் மாநிலத்தில் வந்தாரா என்ற பெயரில் விலங்குகள் நல காப்பகத்தை வைத்து நடத்தி வருகிறார்.
ஆனந்த் அம்பானியின் இந்த முன் முயற்சியை பாராட்டக்கூடிய வகையில் பிரபல ஆடம்பர கை கடிகார தயாரிப்பு நிறுவனமான ஜேக்கப் & கோ நிறுவனம் ஆனந்த் அம்பானியை பாராட்டி பிரத்யேக கைக்கடிகாரம் ஒன்றை தயாரித்து வெளியிட்டு இருக்கிறது. இந்த ஆடம்பர கடிகாரம் குறித்து தான் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த கடிகாரத்தின் டயலின் மத்திய பகுதியில் ஆனந்த் அம்பானியின் மினியேச்சர் உருவம் வைக்கப்பட்டுள்ளது. ஆனந்த் அம்பானி பச்சை நிற சட்டை அணிந்து அமரும் வகையில் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. அவருடைய அந்த மினியேச்சர் உருவம் மையத்தில் இருக்க அருகிலேயே சிங்கம், புலி உள்ளிட்ட விலங்கினங்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆனந்த் அம்பானியின் வந்தாரா பசுமையான சூழலில் இருக்கிறது என்பதை எடுத்துரைக்கும் வகையில் இந்த கடிகாரத்தின் டயல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஜேக்கப் & கோ நிறுவனம் பிரத்தியேகமான முறையில் இந்த கைக்கடிகாரத்தை வடிவமைப்பு செய்திருக்கிறது. கிட்டத்தட்ட 400 அரியவகை கற்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கைக்கடிகாரத்தை உருவாக்கி இருக்கின்றனர்.
வெள்ளை வைர கற்கள் மற்றும் பல்வேறு அரிய வகை கற்களைக் கொண்டு இந்த கைக்கடிகாரத்தை வடிவமைத்திருப்பதாக ஜேக்கப் & கோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த கைக் கடிகாரத்தின் விலையாக 12.5 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்திருக்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் தற்போது டிரெண்டாக பேசப்படக் கூடிய ஒரு விஷயமாக இந்த கைக்கடிகாரம் மாறி இருக்கிறது. கடந்த 2025 ஆம் ஆண்டில் தான் பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் ஜாம்நகர் பகுதியில் ரிலையன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள வந்தாரா விலங்குகள் நலக்காப்பகத்தை தொடங்கி வைத்தார்.
முழுக்க முழுக்க ஆனந்த் அம்பானியின் மேற்பார்வையில் தொடங்கப்பட்டிருக்கிறது இந்த விலங்குகள் காப்பகம். பல்வேறு விலங்குகளையும் மீட்டு இங்கே பராமரித்து வருகின்றனர். 3500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வந்தாரா காப்பகத்தில் 1.5 லட்சம் விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு லட்சம் சதுர அடிக்கு மருத்துவமனை, விலங்குகளுக்கு உணவு தயாரித்து வழங்குவதற்கான பிரத்தியேக நிபுணர்கள், விலங்குகளுக்கான மருத்துவர்கள் என ஏராளமானவர்கள் இங்கே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications