மஹா கும்பமேளா என்பது 114 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் நிகழ்வாகும். உலகிலேயே உலகத்திலேயே மிகப்பெரிய விழாவாகவும், அதிகளவு மக்கள் ஒன்றாகக் கூடும் விழாவாகவும் UNESCO ஆல் அங்கிகரிக்கப்பட்ட விழாதான் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெறும் மஹா கும்பமேளா. இந்த மஹா கும்பமேளாவில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகளும் இணையக் கூடிய திரிவேணி சங்கமத்தில் நீராடினால், பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கும்பமேளா நடைபெற என்ன காரணம்..?: அமிர்தத்தை பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பார்க்கடலை கடந்தனர். அப்போது, பல்வேறு தெய்வீகத்தன்மை கொண்ட பொருட்கள் அதில் இருந்து வெளிவந்துள்ளது. கடைசியாக, அமிர்தமும் வந்துள்ளது. இது அசுரர்களுக்கு கிடைக்கக்கூடாது என நினைத்த மகாவிஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து அமிர்தம் இருக்கும் கும்பத்தை எடுத்துச் சென்றார். ஆனால், அதில் இருந்து சில துளிகள் பூமியின் சிந்தியுள்ளது. அது விழுந்த இடங்கள்தான் தற்போது பிரயாக்ராஜ், ஹரித்வார், உஜ்ஜயினி, காசி ஆகிய புனித நகரங்களாக மாறியுள்ளது. இதன் நினைவாகத்தான் மஹா கும்பமேளா கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டு ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய மஹா கும்பமேளா, பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த கும்பமேளாவில் எதிர்பாராத லாபத்தைத் தொடர்ந்து, இங்கு மக்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால், இங்கு அதிகமான நிறுவனங்கள் ஜெகன்னாத் பூரி ரத யாத்திரையின் பக்கம் திரும்பியுள்ளன. இந்த நிகழ்விற்கான பிராண்ட் ஆர்வம் மற்றும் விளம்பரச் செலவுகள் அதிகரித்துள்ளது. ஜூன் 27ஆம் தேதி முதல் இந்த யாத்திரை தொடங்க இருக்கிறது. மேலும், இந்த ஆண்டு 1.5 கோடிக்கும் அதிகமான யாத்ரீகர்களை ஈர்க்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
யாத்திரையின் போது, இந்தாண்டு செலவுகள் 14 மடங்கு அதிகரித்து ரூ.50 முதல் ரூ.60 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு ரூ.3 முதல் ரூ.4 கோடியாக இருந்தது. இதுதொடர்பாக பேசியுள்ள ஊடக மற்றும் பிராண்டிங் நிறுவனமான சாய்பானியின் நிறுவனர் ஸ்ருதி ஹரேஷ் சதுர்வேதி, எங்களுக்கு 26 பிராண்டுகளிடமிருந்து கொள்முதல் ஆர்டர்கள் கிடைத்துள்ளன. அடுத்த வாரத்தில் மேலும் 11-12 ஆர்டர்களை முடிப்போம். பிராண்ட் பங்கேற்பின் அடிப்படையில் 60 - 65 சதவீதம் அதிகரிப்பு இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தாண்டு யாத்ராவிற்கான பிராண்ட் டீல்கள் 10 நாட்களுக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.2.5 கோடி வரை இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மத உணர்வுகளின் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற இந்தியாவில் இருந்து வருகை மற்றும் பங்கேற்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில், இந்தாண்டு பல பிராண்டுகள் இந்த நிகழ்விற்காக செலவுகளை ஒதுக்காததால் பங்கேற்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு பிரண்டுகள் ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்வுகளை திட்டமிட கூறியுள்ளன. ஜூன் 22ஆம் தேதி முதல் ஜூன் 26ஆம் தேதி வரை ஜகன்னாத் பூரி ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வுகளில் பிராண்டுகளும் அங்கு சந்தைப்படுத்த விரும்புகின்றன. ஒடிசாவில் உள்ள பாலி யாத்ரா மேளா என்பது பிராண்டுகளின் ஆர்வமுள்ள ஒரு இடமாகும். இந்த (ஆன்மீக/கலாச்சார) நிகழ்வுகள் பயணத்தைப் போலவே சந்தைப்படுத்தல் ஏற்றத்தை உருவாக்கியுள்ளன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications