அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற நாளிலிருந்து அண்டை நாடான கனடா பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. ஏற்கனவே கனடா நாட்டின் அரசியல் தளம் மோசமாக இருக்கும் வேளையில், தற்போதும் டிரம்ப்-ன் நெருக்கடி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் வேண்டுமானாலும் வர்த்தக போர் வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இதன் நீட்சியாக தற்போது டெஸ்லா குறிவைக்கப்பட்டு உள்ளது.
டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, கனடா மற்றும் மெக்சிகோ நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகப்படியான போதை மருந்துகள் கடத்தப்பட்டு வருவதாகக் கூறி 25 சதவீத வரி விதிக்க டிரம்ப் உத்தரவு போட்டார். ஆனால் இரு நாடுகள் மத்தியில் பேச்சுவார்த்தை முடிந்த பின்பு 30 நாள் காலக்கெடு கொடுக்கப்பட்டது. உண்மையில் இரு நாடுகளுக்கு மத்தியில் பிரச்சனை முழுமையாக முடியவில்லை என்பது இந்த ஒரு விஷயத்தின் மூலம் தெரிகிறது.

டொனால்டு டிரம்ப் கனடா நாட்டின் மீது பல்வேறு துறைகளைக் குறிவைத்து வரி விதிக்க திட்டமிட்டு வருவதாகக் கூறப்பட்டு வரும் வேளையில், கனடா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜக்மீத் சிங் முக்கியமான அறிவிப்பை டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
டிரம்பும், மஸ்க்கும் கனடா நாட்டின் ஆட்டோமொபைல் துறையையும், தொழிலாளர்களையும், வரி மூலம் தாக்கினால், நான் டெஸ்லா கார்கள் மீது 100% வரி விதிப்பேன் - மேலும் கனடா நாட்டினர் கனடாவில் தயாரிக்கப்பட்ட EVகள் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட்களை வாங்கினால் 10,000 டாலர் தள்ளுபடி தரப்போவதாக ஜக்மீத் சிங் கூறுகிறார்.
கனடியத் தொழிலாளர்களை ஆதரித்து, அமெரிக்காவின் வரி விதிப்புக்குப் பதிலடி கொடுப்போம் என இந்த எக்ஸ் பதிவில் ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார்.

யார் இந்த ஜக்மீத் சிங்..? ஜக்மீத் சிங் ஜிம்மி தலிவால் எம்.பி கனடா நாட்டின் அரசியல்வாதி ஆவார், இவர் 2017 முதல் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவராக பணியாற்றி வருகிறார். சிங் 2019 முதல் பர்னபி தெற்கு நாடாளுமன்ற உறுப்பினராக அமர்ந்துள்ளார்.
ஜக்மீத் சிங்-ன் பேச்சு டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தை புதிய வரி விதிப்பு கொண்டு வர வழிவகுக்குமா என்ற கேள்வியும் உள்ளது.


Click it and Unblock the Notifications