பிரிட்டிஷ் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் தனது பழைய லோகோவை மாற்றியுள்ளது. ஜாகுவார் நிறுவனம் மிகவும் பழமையான கார் தயாரிப்பு நிறுவனமாகும், இது கடந்த 89 ஆண்டுகளாக பல வகையான கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது நிறுவனம் தனது முழு கவனத்தையும் மின்சார கார்களில் செலுத்துகிறது. ஜாகுவார் தனது புதிய எலக்ட்ரிக் கார் மாடலை டிசம்பர் 3 ஆம் தேதி மியாமி ஆர்ட் வீக்கில் உலகுக்கு அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் காரணமாக நிறுவனம் தனது பழைய லோகோவை மாற்றி புதிய லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜாகுவார் புதிய லோகோ எப்படி இருக்கிறது: ஜாகுவார் புதிய லோகோ சிறிய எழுத்துக்களை கொண்டுள்ளது. இது ஜாகுவார் விலங்கு வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் எழுத்து ஜி ஆனது விலங்கின் வாலையும், கடைசி எழுத்து ஆர் அதன் தலைப்பகுதியையும் இணைக்கும் வகையில், எழுத்துக்கள் நீல வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், இதில் வரும் G மற்றும் U மட்டும் ஆங்கிலத்தின் பெரிய எழுத்துக்கலாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லோகோ கோல்டன் கலரில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜம்பிங் கேட் லோகோவும் பித்தளை பொறிக்கப்பட்ட புதுப்பிப்பைப் பெறுகிறது. இது தவிர, மார்க்கெட்டிங் ஸ்லோகங்களில் "டிலிட் ஆர்டினரி, லைவ் விவிட் மற்றும் நதிங் நதிங் போன்ற ஸ்லோகங்களை கொண்டுள்ளன

புதிய லோகோவுக்கு எலோன் மஸ்க் கேள்வி: ஜாகுவாரின் இன் புதிய லோகோ அறிமுகம் குறித்து எக்ஸ் தளத்தில் Tesla CEO எலான் மஸ்க் கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார். அதில் ஜாகுவர் கார் நிறுவனத்திடம் "நீங்கள் கார்களை விற்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார். பதிலளித்த ஜாகுவார், "ஆம் நாங்கள் உங்களுக்குக் காட்ட விரும்புகிறோம், டிசம்பர் 2 ஆம் தேதி மியாமியில் எங்களுடன் ஒரு கப் தேநீர் அருந்துவதற்கு எங்களுடன் சேருங்கள் என்று கூறியுள்ளனர்.
அதேபோல், பல்வேறு தரப்பினரும் எக்ஸ் தளத்தில் இந்த லோகோ மாற்றம் குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஜாகுவார் நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்குள் சொகுசு EV பிராண்டாக மாறுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த புதிய பிராண்ட் அடையாளத்துடன் லோகோ மாற்றப்பட்டுள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications