ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தியரி பொல்லோரே தனது தனிப்பட்ட காரணங்களுக்காக நிறுவனத்தில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதன் மூலம் தியரி பொல்லோரே டிசம்பர் 31, 2022 அன்று நிறுவனத்தை விட்டு வெளியேற உள்ளார்.
ஜாகுவார் லேண்ட் ரோவர்
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜாகுவார் லேண்ட் ரோவரில் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து சாதித்ததை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தியரி பொல்லோரே தெரிவித்துள்ளார்.
தியரி பொல்லோரே
ஒரு நவீன ஆடம்பர வணிக நிறுவனமாக நிலையான, லாபகரமான எதிர்காலத்தை நோக்கி நிறுவனத்தின் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது.
நன்றி
இதோடு நிறுவனத்தில் இருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்திற்காகக் குழு மற்றும் முழு நிறுவனமும் எதிர்காலத்திற்குச் சிறந்ததாக இருக்க வாழ்த்துகிறேன் எனப் பொலோரே கூறினார்.
அட்ரியன் மார்டெல்
இந்த நிலையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாக அட்ரியன் மார்டெல் இன்று முதல் பொறுப்பேற்கிறார். அவர் 32 ஆண்டுகளாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார், மேலும் 3 ஆண்டுகளாக நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
என் சந்திரசேகரன்
ஜாகுவார் லேண்ட் ரோவரில் தியரி பொல்லோரே செய்த அனைத்திற்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என டாடா சன்ஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆகியவற்றின் தலைவர் சந்திரசேகரன் கூறினார். தியரி பொல்லோரே நிர்வாகத்தின் கீழ் வெற்றிகரமான மாற்றத்திற்கான அடித்தளம் போடப்பட்டுள்ளது மட்டும் அல்லாமல் நிறுவனத்தை எதிர்காலத்திற்கு நன்கு தயார்ப்படுத்தியுள்ளது.
945 கோடி ரூபாய் நஷ்டம்
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தாய் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டின் முடிவுகளில் இந்நிறுவனம் 945 கோடி ரூபாய் அளவிலான ஒருங்கிணைக்கப்பட்ட நிகர இழப்பைப் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டில் இழப்பின் அளவு 4442 கோடி ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications