ஜெயிலர் 2 படம் : சூப்பர் ஸ்டாருக்கு சம்பளம் இல்லாமல் லாபத்திலும் பங்கா? அதுவும் இத்தனை கோடியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் 2 திரைப்படம் வரும் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் , இசை அமைப்பாளர் அனிருத் என வெற்றி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் என்பதால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜெயிலர் முதல் பாகத்திலேயே கெஸ்ட் ரோலில் பல்வேறு திரையுலக நட்சத்திரங்களும் தோன்றினர். இந்த படத்திலும் பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின் படி ஜெயிலர் 2 படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 240 கோடி முதல் 300 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரஜினிகாந்த் உள்பட முக்கிய நடிகர்களின் சம்பளமும் அடங்கும்.

ஜெயிலர் 2 படம் : சூப்பர் ஸ்டாருக்கு சம்பளம் இல்லாமல் லாபத்திலும் பங்கா? அதுவும் இத்தனை கோடியா?

நடிகர்களின் சம்பளம் அதிகமாக இருப்பதால் படத்தின் தயாரிப்பு செலவு கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளதாகவும், உண்மையான படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு செலவுகள் 100 கோடிக்கும் குறைவாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. முதல் பாகமான ஜெயிலர் படம் சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, உலக அளவில் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

ஜெயிலர் 2 படத்திற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு ஆரம்ப சம்பளமாக சுமார் 110 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனுடன் சேர்த்து, படத்தின் லாபத்தில் ஒரு பங்கும் (Profit Share) சூப்பர் ஸ்டாருக்கு வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. படம் பாக்ஸ் ஆபிஸில் மிக சிறப்பாக செயல்பட்டால், இதன் மூலம் ரஜினிகாந்த் பெறக்கூடிய மொத்த வருமானம் சுமார் 180 கோடி ரூபாய் வரை உயரக்கூடும் என கணிக்கப்படுகிறது.

Also Read

ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. மொத்தமாக தமிழ்நாடு ,கேரளா ,கர்நாடகா மற்றும் வட மாநிலங்களிலும் முதல் நாளுக்கான அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் 20 கோடி ரூபாய் மதிப்பை தாண்டி இருப்பதாக சாச்நிக் தளம் வெளியிடும் செய்தி கூறுகிறது. 242 நகரங்களில் 771 திரையரங்குகளில் 4800க்கும் அதிகமான காட்சிகளில் படம் வெளியாகிறது. முதல் நாள் படத்தை காண சுமார் 6 லட்சம் டிக்கெட்டுகள் வரை விற்பனை செய்யப்பட்டு இருக்கிறதாம். படத்திற்கான அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் தொடங்கிய மூன்று நாட்களிலேயே 20 கோடி ரூபாய் வரை டிக்கெட் புக்கிங் செய்யப்பட்டிருப்பதாக சாச்நிக் தளம் கூறுகிறது.

Recommended For You

ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே போட்ட முதலீட்டை திரும்ப எடுத்து விட்டது. ஏனெனில் தமிழ்நாட்டில் திரையரங்கில் வெளியிடுவதற்கான உரிமம் 110 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு சந்தையில் இத்திரைப்படத்தை வெளியிடுவதற்காக உரிமங்கள் 75 கோடி ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளது.

ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் 60 கோடி ரூபாய் , கர்நாடகாவில் 35 கோடி ரூபாய், வட இந்தியாவில் 27 கோடி ரூபாய், கேரளாவில் 18 கோடி ரூபாய் என தியேட்டர் வெளியீட்டு உரிமம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம்.ஜெயிலர் 2 திரைப்படம் ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி வெளியாவதால் அதிகமான ரசிகர்களை திரையரங்கிற்கு ஈர்த்து மாபெரும் வசூலை குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+