இந்தியாவில் தற்போது திருமண சீசன் களைகட்டியிருக்கும் நிலையில், திருமணச் செலவுகள் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், ஜெய்ப்பூரில் உள்ள ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற ஒருவர், அந்த 4 மணி நேர நிகழ்வுக்காக செலவிடப்பட்ட பிரம்மாண்டத் தொகையை வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
அதாவது, வெறும் 4 மணி நேர நிகழ்ச்சிக்கு ரூ.37,40,000 செலவழித்த பில்லை அவர் காண்பிக்க, இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் பரவி கேள்வி எழுப்பியுள்ளது.

அந்த வீடியோவில் பேசிய விருந்தினர், தான் ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் திருமண விழாவிற்கு வந்திருப்பதாகக் குறிப்பிட்டு, "நான் இப்போது கையெழுத்திட்ட பில் ரூ.37 லட்சம் 40 ஆயிரம். இதில் இரவு தங்கியதற்கான செலவு சேர்க்கப்படவில்லை. வெறும் 4 மணி நேர நிகழ்வுக்கு சுமார் ரூ.40 லட்சம் செலவாகிறது. இது எவ்வளவு பெரிய விரயம் என்பதை யோசித்துப் பாருங்கள்" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் அவர், "நாம் திருமணம் செய்துகொண்டாலும், அந்த பந்தம் எத்தனை காலத்துக்கு நிலைக்கும்? அதனால், திருமண நிகழ்வுகளை மிகவும் எளிமையாக வைத்துக் கொள்ளுங்கள். கஷ்டமான காலங்களில் உங்களுக்குத் துணையாக இருப்பவர்களை மட்டும் அழைத்து வாருங்கள். திருமணத்தை ஒரு பெரிய விழாவாக பார்க்காமல், வாழ்க்கையின் ஒரு முக்கியமான நிகழ்வாக மட்டும் பாருங்கள்" என்று வலியுறுத்தியுள்ளார்.
வரி உட்பட ஒரு தட்டு உணவுக்கு ரூ.3,440 செலவாகிறது. நான் அதிகபட்சம் 250 கிராம் கூட சாப்பிடவில்லை. ஒரு சிறிய கிண்ணம் அல்வா, ஒரு அப்பளம், சூப் இதுதான் என் இரவு உணவு. இவ்வளவு பணம் முற்றிலும் வீணாகிறது என்று வேதனையுடன் தெரிவித்தார். மேலும், இந்த வீணான பணத்தை உங்கள் மகளின் எதிர்காலத்திற்காக ஃபிக்ஸட் டெபாசிட் (FD) செய்யுங்கள். அது அவரது வாழ்க்கைக்கு உதவும். ஏற்கனவே வயிறு நிரம்பி இருப்பவர்களுக்கு ஆடம்பரமாக சோறு போட வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
ரூ.6.5 லட்சம் கோடி புழங்கும் திருமண சந்தை : அந்த விருந்தினரின் வீடியோ வெளியான நிலையில், இந்தியாவில் இப்போது திருமணங்களுக்கான உச்சக்கட்ட சீசன் நடந்து வருகிறது. CAIT வெளியிட்ட கொடாக் MF அறிக்கையின்படி, இந்த 45 நாள் திருமண காலத்தில் மட்டும் சுமார் 4.6 மில்லியன் (46 லட்சம்) திருமணங்கள் நடக்கவுள்ளன. அதாவது, ஒரு நாளைக்கு ஒரு லட்சம் திருமணங்கள்.
இந்தக் குறுகிய காலத்தில் மட்டும் இந்தியப் பொருளாதாரத்தில் ரூ.6 லட்சம் கோடி முதல் ரூ.6.5 லட்சம் கோடி வரை பணம் புழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டை விட செலவு அதிகரித்துள்ளதை காட்டுகிறது. இந்தப் பெரிய செலவுத் தொகை, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 1.91% சதவிகிதத்திற்குச் சமம். இந்தியாவின் திருமணச் சந்தை 130 பில்லியன் டாலர் மதிப்புடையது. இது நாட்டின் நான்காவது பெரிய துறையாக, விமானப் போக்குவரத்துத் துறையை விடப் பெரிதாக விளங்குகிறது.
கல்விக்கு ஆகும் செலவை விட அதிகம் : 'ஜெஃப்ரீஸ்' (Jefferies) நிறுவனத்தின் 2024 ஆய்வறிக்கை ஒன்று, இந்தியக் குடும்பங்கள் தங்கள் குழந்தையின் 18 ஆண்டுகாலக் கல்விச் செலவை விட இரண்டு மடங்கு அதிகமாக, ஒரே ஒரு திருமணத்திற்காக செலவிடுகின்றன என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஒரு சராசரி குடும்பம் தனது வாழ்நாள் வருமானத்தில் 20% ஐ ஒரே ஒரு திருமணத்திற்காக செலவிடுகிறது.
திருமணத்திற்கான செலவுகளைச் சமாளிக்க 82% பேர் சேமிப்பைப் பயன்படுத்துகிறார்கள், 12% பேர் தனிநபர் கடன்கள் எடுக்கிறார்கள், மேலும் நகரங்களில் வாழும் சுமார் 30% தம்பதிகள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆடம்பர திருமணங்கள் அதிகரித்து வரும் நிலையில், "இந்த வீணான பணத்தை மகளுக்கு FD-யாகக் கொடுங்கள்" என்ற ஜெய்ப்பூர் விருந்தினரின் கருத்து சமூக வலைதளங்களில் பலரின் ஆதரவை பெற்று வருகிறது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications