11 ஆண்டுகள் பழமையான இந்திய கடிகார பிராண்டான ஜெய்ப்பூர் வாட்ச் கம்பனி (JWC), கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (ISRO) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், JWC நிறுவனம், இஸ்ரோவின் முக்கிய செயல்பாடுகளைக் கொண்ட கடிகாரங்களை தயாரிக்கவுள்ளது. இதில், நிலவில் பாதுகாப்பாக தரையிறங்கி ரோவரை இயக்கிய சந்திரயான் மிஷன் போன்ற இஸ்ரோவின் வெற்றிகரமான செயல்பாடுகளைக் கொண்ட கடிகாரங்களும் அடங்கும்.
JWC-இன் நிறுவனர் கௌரவ் மேத்தா, அறிவிப்பின்போது கூறுகையில், "இஸ்ரோ நிறுவனம் எங்களுக்கு செயற்கைக்கோள் படங்கள் மற்றும் எங்கள் வடிவமைப்புகளை உருவாக்கப் பயன்படுத்தக்கூடிய பொருட்களை வழங்கியுள்ளது. வாட்ச் தயாரிப்பு முடிந்ததும், அந்த வடிவமைப்புகள் உற்பத்திக்கு செல்லும் முன் இஸ்ரோவால் அங்கீகரிக்கப்படும்.

உலகளவில், நீங்கள் நிறைய நாசா-தீம் கொண்ட கடிகாரங்களைப் பார்ப்பீர்கள்... இதுவரை யாரும் உண்மையிலேயே இஸ்ரோ-தீம் கொண்ட கடிகாரங்களை உருவாக்கவில்லை. அதற்கு அதிகாரப்பூர்வமாக உரிமம் பெற வேண்டும்... நாங்கள் இஸ்ரோவிடமிருந்து அனுமதி கேட்டோம், அனைத்து ஆவணங்களையும் சமர்பித்தோம், அதன் பின் அதிகாரப்பூர்வ உரிமம் பெற்றோம். இன்றுடன் 6 மாதங்கள் முடிந்த பிறகு தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்று கூறியுள்ளார்.
இஸ்ரோ தீம் கொண்ட கடிகாரங்கள் இதற்கு முன்பு இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளன. 2021-ஆம் ஆண்டில் பெங்களூர் வாட்ச் கம்பனி (BWC), இந்திய விண்வெளி திட்டத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் அதன் அபோஜி தொகுப்பை வெளியிட்டது.
2024-ஆம் ஆண்டு, BWC நிறுவனம் தனது அபோஜி கடிகாரங்கள் வளிமண்டலத்தில் இயங்குமா? என்பதை சோதிக்க ஒரு சோதனையை செய்தது. அதற்காக ஒரு விண்கலத்தில் 114,000 கிமீ உயரத்திற்கு ஒரு கடிகாரத்தை அனுப்பியது. அந்த சோதனை வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தது. அதை அடுத்து தற்போது ஜெய்ப்பூர் வாட்ச் கம்பெனியும் இஸ்ரோவின் பெருமையை சொல்லும் வாட்ச்களை தயாரிக்க உள்ளது.
ஜெய்ப்பூர் வாட்ச் கம்பெனி 2013-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதுவரை அதன் மிகவும் பிரபலமான கடிகாரம் என்றால் அவை நாணய கடிகாரம் தான். ஜெய்ப்பூரை தலைமையிடமாகக் கொண்ட, ஜெய்ப்பூர் வாட்ச் கம்பெனி, இந்திய நாணயங்கள், முத்திரைகள் மற்றும் ராஜா ரவி வர்மா ஓவியங்கள் போன்ற கலைகளில் இருந்து வடிவமைப்பை பெற்றுள்ளது.
தற்போது ஜெய்ப்பூர் வாட்ச் நிறுவனத்தால் தயாரிக்கப்பட உள்ள இந்த இஸ்ரோ கடிகாரங்களுக்கு இன்னும் சில பொருட்கள் தேவைப்படுகிறது என்று மேத்தா கூறியுள்ளார். இது போன்ற இஸ்ரோ செயல்பாடுகள் குறித்த கடிகாரங்கள் தயாரிக்கப்பட்டால் மக்களின் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications