ஹெச்1பி விசா தான் தற்போது அமெரிக்க கார்ப்ரேட் மத்தியில் முக்கிய விவாத பொருளாக உள்ளது, அமெரிக்க நிறுவனங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் நிலையான வளர்ச்சி, உலகளாவிய திறமைகளை அமெரிக்காவுக்கு கொண்டு வந்து வேகமாக வளர்ச்சி அடையவும், அதேநேரத்தில் செலவுகளை குறைக்கவும் முக்கியமான வழியாக இருந்தது ஹெச்1பி விசா. ஆனால் இந்த விசா அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்பை பறிக்கும் விஷயமாக உள்ளது என பிரபல முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.
அமெரிக்க முதலீட்டு நிறுவனமான அசோரியாவின் (Azoria) நிறுவனர் மற்றும் சிஇஓ ஜேம்ஸ் பிஷ்பேக் அமெரிக்க வர்த்தக துறையை தாண்டி அரசியல் வட்டாரத்திலும் பிரபலம். இதற்கு காரணம் DOGE. ஜேம்ஸ் டிவிட்டர் செய்த பதிவில் H1-B விசா திட்டத்தை "SCAM" என்று விமர்சித்துள்ளார். இவருடைய பதிவு ஹெச்1பி விசா கட்டுப்பாடுகளை நீக்க கோரி போராடும் மக்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

ஜேம்ஸ் பிஷ்பேக் அக்டோபர் 26ஆம் தேதி டிவிட்டரில் செய்த பதிவில், அமெரிக்க நிறுவனங்கள் தகுதியான அமெரிக்க ஊழியர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற காரணத்தால் H1-B விசாவை பயன்படுத்துவதாக கூறினாலும், உண்மையில் அவர்கள் அமெரிக்க தொழிலாளர்களை தேடுவதில்லை என்று குற்றம் சாட்டினார்.
வெளிநாட்டிலிருந்து குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வந்து பணியில் அமர்த்தி தகுதியான அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை பறிப்பதாக அவர் கூறினார். இது அமெரிக்கர்களை ஊழியர்களாக மாற்றாமல் மோசடி செய்யப்படுவதை தாண்டி, வெளிநாட்டு தொழிலாளர்களையும் அமெரிக்க நிறுவனங்கள் சுரண்டுவதாக அவர் விளக்கினார்.
மேலும் ஜேம்ஸ் பிஷ்பேக் தனது பதிவில், அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் இருக்கும் காலி பணியிடங்களுக்கு அமெரிக்கர்களை இண்டர்வியூவ் செய்ய மறுத்து, வேலைவாய்ப்பு விளம்பரங்களை மறைமுகமாக வெளியிட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
இப்படி அமெரிக்கர்கள் விண்ணப்பிக்காமல் போகும்போது, வெளிநாட்டு தொழிலாளர்களை அழைத்து அமெரிக்க நிறுவனங்கள் பணியில் அமர்த்தி வருகிறது. இந்த செயல்முறை அமெரிக்கர்களின் ஊதியம், வேலை மற்றும் கௌரவத்தை பறிப்பதாக உள்ளது என ஜேம்ஸ் தெரிவித்தார். மேலும் அவர் H1-B SCAM-ஐ முற்றிலும் அகற்ற வேண்டும் என்று அவர் கோரினார்.

ஏற்கனவே டிரம்ப் புதிதாக ஹெச்1பி விசா பெறுவோருக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு இருக்கும் வேளையில் ஜேம்ஸ் பிஷ்பேக்-ன் பதிவு புதிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் அமெரிக்காவின் இக்கட்டுப்பாடுகள் காரணமாக கனடா புதிய திட்டத்தை அறிவிக்கவும், உலக நாடுகளில் இருந்து திறமையான ஊழியர்களை ஈர்க்க திட்டமிட்டு வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications