ஜம்மு காஷ்மீரில் நாட்டிலேயே முதன்முறையாக 5.9 மில்லியன் டன் லித்தியம் தாது இருப்புக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுரங்க அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தின் சலால்-ஹைமானா பகுதியில் 5.9 மில்லியன் டன்கள் கொண்ட லித்தியம் ஊகிக்கப்பட்ட வளங்கள் (ஜி3) முதன்முறையாக இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது என்று சுரங்க அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
லித்தியம் என்பது இன்று உலகமே தேடி அழையும் ஒரு முக்கியக் கனிமம். உலகம் முழுவதும் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிப்பதில் தீவிரமாக இருக்கும் வேளையில் அதன் பேட்டரியை தயாரிப்பில் முக்கியக் கனிமம் லித்தியம்.
51 கனிமத் தொகுதிகள்
இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 51 கனிமத் தொகுதிகளைக் கண்டுபிடித்துள்ளது. இதில் 5 தொகுதிகள் தங்கம் உள்ளதாகவும், மற்ற கனிமத் தொகுதிகளில் பொட்டாஷ், molybdenum , அடிப்படை உலோகங்கள் போன்ற பொருட்கள் உள்ளது.
11 மாநிலம்
இந்த 51 கனிமத் தொகுதிகள் ஜம்மு மற்றும் காஷ்மீர் (UT), ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 11 மாநிலங்களில் உள்ளது எனச் சுரங்க அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
லித்தியம், தங்கம்
மேலும் இந்தப் பகுதிகளில் இருக்கும் 51 கனிமத் தொகுதிகளில் லித்தியம், தங்கம் உள்ளிட்ட தாதுக்கள் உள்ளதாகவும், இதை அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் முக்கியமாக லித்தியம் என்பது ஒரு இரும்பு அல்லாத உலோகம் மற்றும் EV பேட்டரிகளில் உள்ள முக்கியக் கூறுகளில் ஒன்றாகும்.
லித்தியம் ஏன் முக்கியம்
இதுவரையில் இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு லித்தியம் குறித்து எவ்விதமான அறிவிப்புகளை வெளியிடாத நிலையில் முதல் முறையாக அறிவித்துள்ளது. லித்தியம் சரங்கம், சுத்திகரிப்பு, தயாரிப்பு ஆகியவற்றில் அமெரிக்கா மற்றும் சீனா பெரும் போட்டியை போட்டு வரும் நிலையில் இந்தியாவும் இதில் சேர்ந்துள்ளது.
இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு
2018-19 முதல் பிப்ரவரி 9 வரையிலான காலகட்டத்தில் இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு மேற்கொள்ளப்பட்ட பணிகளின் அடிப்படையில் இந்த 51 கனிம தொகுதிகள் பட்டியலிடப்பட்டு உள்ளது. தங்கத்தைக் காட்டிலும் லித்தியம் கனிமம் கிடைத்தது மூலம் தொழிற்துறை வியப்பில் உள்ளது.
எலக்ட்ரிக் வாகன யுகம்
இந்த எலக்ட்ரிக் வாகன யுகத்தில் லித்தியம் பேட்டரிக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இதன் விலையும் அதிகரித்துள்ளது. லித்தியம் கனிம இருப்பு உலகளவில் மிகவும் குறைவாகவே இருக்கும் வேளையில் இதன் சுத்திகரிப்பு செலவுகளும் அதிகமாக இருக்கும் காரணத்தால் லித்தியம் உலோகத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
எலான் மஸ்க்
எலான் மஸ்க் கூட லித்தியம் உலோகத்தின் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ள காரணத்தால் கார் தயாரிப்பு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனக் கூறியுள்ளார். இதனால் லித்தியம் உலோகம் இந்தியாவில் கிடைத்திருப்பது EV துறைக்கு முக்கியச் செய்தியாக மாறியுள்ளது.
மத்திய அரசு
மத்திய அரசு இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காகச் சுமார் 3.4 பில்லியன் டாலர் அளவிலான தொகையை ஊக்க தொகையாக அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் 2070 ஆம் ஆண்டுக்குள் இந்தியா நெட் ஜீரோ அளவீட்டை அடையும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
எலக்ட்ரிக் கார் மற்றும் பைக்
மேலும் இந்தியாவில் எலக்ட்ரிக் கார் மற்றும் பைக் தயாரிக்கப்பட்டாலும் அதிகளவிலான லித்தியம் பேட்டரி வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது லித்தியம் தாது இந்தியாவிலேயே கிடைக்கப்பட்டு உள்ள காரணத்தால் இன் இந்திய EV மற்றும் லித்தியம் பேட்டரி தயாரிப்பில் புதிய அத்தியாயம் உருவாக்கப்படலாம்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications