சொகுசு ஹோட்டல் குறித்து பேசும்போது, நம்மை அறியாமலேயே நமது உதடுகள் முதல் பெயராக தாஜ் ஹோட்டல் பெயரை உச்சரிக்கும். டாடா குழுமத்துக்கு சொந்தமான தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டலில் இல்லாத வசதிகள் கிடையாது.
இந்த ஹோட்டலில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு குறைந்தபட்சமே ரூ.22,000 ஆகும். இந்த டாடா குழுமத்தின் ஹோட்டல் தொடங்கப்பட்டதன் பின்னணியில் பெரிய வரலாற்று கதை உள்ளது. இந்த ஹோட்டலை கட்டியவர் டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்செட்ஜி டாடா.

1900க்கு முன்பு இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது நம் நாட்டில் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியர்கள் பாகுபாடு காட்டப்பட்டனர். இங்கிலாந்தில் உள்ள வாட்சன் ஹோட்டல் போன்ற பெரிய ஹோட்டல்களில் இந்தியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. வாட்சன் ஹோட்டலில் வெள்ளையர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
ஆங்கிலேயர்களின் இந்த செயல் இந்தியர்களை இழிவுப்படுத்துவதாக இருப்பதை ஜாம்செட்ஜி உணர்ந்தார். இதனையடுத்து பாகுபாடு இல்லாமல் அனைவரும் நுழையும் வகையில் ஒரு சொகுசு ஹோட்டலை திறக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து 1898ல் மும்பையில் கடற்கரை அருகே பிரம்மாண்டமான ஆடம்பர ஹோட்டலை கட்டும் பணியை தொடங்கினார். ஹோட்டல் கட்டி முடிக்க 5 ஆண்டுகளானது.
தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டல் கட்டுவதற்காக பணத்தை தாராளமாக டாடா செலவிட்டார். ரூ.4,21,00,000 செலவில் ஹோட்டல் கட்டிமுடிக்கப்பட்டது. 125 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஹோட்டலை கட்டுவதற்காக செலவிட்ட இந்த தொகை இன்றைய மதிப்புக்கு நிச்சயம் சில ஆயிரம் கோடியாக இருக்கும்.
1903 டிசம்பரில் தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டல் திறக்கப்பட்டது. தாஜ் ஹோட்டல்தான் மும்பையில் மின்சாரத்தில் இயங்கிய முதல் கட்டிடம். டெலிபோன், மின்சார லிப்ட் மற்றும் குளிர்சாதன பெட்டி போன்ற வசதிகள் கொண்ட முதல் கட்டிடமும் இதுதான். இந்த ஹோட்டல் முதன் முதலில் தொடங்கியபோது, அங்கு ஒருநாள் இரவு தங்க ரூ.30 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இந்த ஹோட்டல் தான் மும்பையின் முதல் உரிமம் பெற்ற பார், ஹார்பர் பாரை கொண்டிருந்தது. இந்தியாவின் முதல் நாள் முழுவதும் உணவருந்தும் உணவகத்தையும் கொண்டிருந்தது. முதல் உலகப்போரின் போது தாஜ் ஹோட்டல், 600 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
2008ல் தீவிரவாத தாக்குததால் இந்த ஹோட்டல் பாதிக்கப்பட்டது. இன்று மும்பையில் உள்ள இந்த ஹோட்டல் உலகின் மிக ஆடம்பரமான ஹோட்டல்களில ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் டாடா குழுமத்தின் சங்கிலித்தொடர் ஹோட்டலான தாஜ் ஹோட்டல் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அதன் சிறந்த சேவைகளுக்காக புகழ் பெற்றுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

கேரள சம்மர் பம்பர் லாட்டரி BR-108 முடிவுகள் ரூ.10 கோடி ஜாக்பாட் யாருக்கு?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications