3400 ஏக்கர் நிலத்தை கைப்பற்றிய கோத்ரேஜ் குடும்பம்.. இனி கோத்ரேஜ் & பொயிஸ் இவர்களுக்கு சொந்தமானது..!

அர்தேஷிர் கோத்ரேஜ் மற்றும் அவரது சகோதரர் உருவாக்கிய கோத்ரேஜ் குழுமம் 127 வருடத்திற்குப் பின்பு இரண்டாக உடைகிறது.
அர்தேஷிருக்கு குழந்தைகள் இல்லை, எனவே இக்குழுமம் அவரது இளைய சகோதரர் பிரோஜ்ஷாவால் (Pirojsha) கைப்பற்றப்பட்டது. பிரோஜ்ஷாவுக்கு நான்கு குழந்தைகள் - சோராப், தோசா, பர்ஜோர் மற்றும் நேவல்.

பல ஆண்டு பயணத்தில், கோத்ரேஜ் குழுவின் தலைமையானது பர்ஜோர் (ஆதி மற்றும் நாதிர்) மற்றும் நேவல் (ஜம்ஷித் மற்றும் ஸ்மிதா) ஆகியோரின் குழந்தைகளுக்கு வந்தது. இதில் சோராப்-க்கு குழந்தைகள் இல்லை, தோசாவுக்கு ஒரு குழந்தை ரிஷாத், ஆனால் ரிஷாத்-க்கு குழந்தைகள் இல்லை.

3400 ஏக்கர் நிலத்தை கைப்பற்றிய கோத்ரேஜ் குடும்பம்.. இனி கோத்ரேஜ் & பொயிஸ்  இவர்களுக்கு சொந்தமானது..!

இதனால் கோத்ரேஜ் கடந்த 50 வருடங்களாக ஆதி கோத்ரேஜ் மற்றும் நாதீர் கோத்ரேஜ் மற்றும் இவர்களுடைய சித்தப்பா வாரிசுகளான ஜாம்ஷெட் கோத்ரேஜ் மற்றும் ஸ்மிதா கோத்ரேஜ் கிருஷ்ணா கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

ஆதி கோத்ரேஜ் மற்றும் நாதீர் கோத்ரேஜ் ஆகியோருக்கு Godrej Industries Group கீழ் இருக்கும் 5 பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் பெறப்பட்டு உள்ள வேளையில், ஜாம்ஷெட் கோத்ரேஜ் மற்றும் ஸ்மிதா கோத்ரேஜ் கிருஷ்ணா கோத்ரேஜ் குழுமத்தின் மற்றொரு முக்கிய பிரிவையும், நில தொகுப்பையும் பெற்றுள்ளனர்.

ஜாம்ஷெட் கோத்ரேஜ் மற்றும் ஸ்மிதா கோத்ரேஜ் கிருஷ்ணா ஆகியோர் பட்டியலிடப்படாத கோத்ரேஜ் & பொயிஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் மும்பையில் முக்கியமான பகுதிகளில் உள்ள முதன்மை நில தொகுப்புகளை மொத்தமாகக் கைப்பற்றுகின்றனர்.

கோத்ரேஜ் என்டர்பிரைசஸ் குழுமம் - ஏரோஸ்பேஸ் மற்றும் விமான போக்குவரத்து முதல் பாதுகாப்பு, பர்னிச்சர் மற்றும் ஐடி மென்பொருள் வரை பல்வேறு துறைகளில் செயல்படும் கோத்ரேஜ் & பொயிஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களைக் கொண்டது.

இதை இனி ஜாம்ஷெட் கோத்ரேஜ் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக கட்டுப்பாட்டில் இயங்கும். அவரது சகோதரி ஸ்மிதாவின் மகள் 42 வயதான நிரிகா ஹோல்கர் இந்நிறுவனத்திற்கு நிர்வாக இயக்குநராக இருப்பார். இதோடு மும்பையில் உள்ள 3,400 ஏக்கர் நிலப்பகுதி உட்பட நில தொகுப்பை இவர்கள் நிர்வகிப்பார்கள்.

மும்பையின் விக்ரோலியில் 3,000 ஏக்கர் பார்சல் உட்பட, மும்பையில் சுமார் 3,400 ஏக்கர் நிலம் கோத்ரேஜ் & பொயிஸ் சொந்தமானது. சில மதிப்பீடுகளின்படி விக்ரோலி உள்ள நிலம் மட்டும் ₹ 1 லட்சம் கோடிக்கு மேல் வளர்ச்சித் திறனைக் கொண்டுள்ளது.

இது 1,000 ஏக்கர் அளவிலான டெவலப்மென்ட் பகுதியாக உள்ளது. அதே நேரத்தில் சுமார் 1,750 ஏக்கர் சதுப்புநிலங்களால் மூடப்பட்டிருக்கும் மற்றும் அரிய தாவரங்கள் மற்றும் பறவைகளின் இடமாகும். ஏற்கனவே சுமார் 300 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

விக்ரோலி சொத்து 1941-42 இல் பம்பாய் உயர்நீதிமன்றத்திடம் இருந்து ஒரு பொது ஏலத்தில் பைரோஜ்ஷா கோத்ரேஜ் மூலம் வாங்கப்பட்டது. 1830களில் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து வாங்கிய பார்சி வணிகரான ஃப்ரம்ஜி பனாஜிக்கு இது முன்பு சொந்தமானது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+