இந்தியாவில் 24 பெரிய இறக்குமதி நிறுவனங்கள் சுமார் 11,000 கோடி ரூபாய் அளவிலான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி அதாவது IGST வரி ஏய்ப்பு செய்துள்ளதை ஜிஎஸ்டி இன்டலிஜென்ஸ் டைரெக்டர் ஜெனரல் (டிஜிஜிஐ) மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) ஆகியவை இணைந்து சமீபத்தில் கண்டறிந்தது அனைவருக்கும் தெரியும்.
இந்த வரி ஏய்ப்பு விஷயத்தை மத்திய அரசு உருவாக்கிய Advanced Analytics in Indirect Taxation (ADVIT) மூலம் பல்வேறு தரவுகளை ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக மறைமுக வரி துறை அதிகாரிகள் கூறினார். இந்த நிலையில் தற்போது இதே போன்ற தொழில்நுட்ப அடிப்படையில் ஜன் தன் கணக்கில் 2000 ரூபாய் நோட்டு டெபாசிட்-களை கண்டறிய வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் போது அதிகப்படியான பணம் வரி ஏய்ப்பு செய்பவர்கள் 3ஆம் தரப்பு கணக்குகளில் முதலீடு டெபாசிட் செய்வார்கள், அப்படி திடீரென அதிகப்படியான தொகை ஜன் தன் கணக்குகளில் வரும் பணத்தையும், அந்த கணக்கையும் கண்காணிப்பில் வைக்கப்படும் என இதுக்குறித்து அறிந்த மூத்த அதிகாரி கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளார்.
சாமானிய மக்களும் சம்பாதித்த பணத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்வது எவ்விதமான பிரச்சனையும் இல்லை. ஆனால் திடீரென அதிகப்படியான பணம், விளக்கம் கொடுக்க முடியாத அளவுக்கான பணம் 2000 ரூபாய் நோட்டாக டெபாசிட் செய்யும் போது கேள்விகள் எழும். இதை ஆய்வு செய்ய வங்கிகள், வரி துறை அதிகாரிகள், அமலாக்க துறை போன்ற அனைத்து அமைப்புகள் முழு எச்சரிக்கை உடன் உள்ளதாக இந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மே 23 முதல் அனைத்து வங்கிகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுக்கும் பணிகளை துவங்க உள்ளது, இந்த நிலையில் இத்தகைய செய்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் மத்திய அரசிடம் தற்போது பல்வேறு தொழில்நுட்ப உதவிகள் உள்ளது, வரி ஏய்ப்பு செய்பவர்கள், கருப்பு பணம் வைத்துள்ளது இதன் மூலம் கண்டுப்பிடிக்க முடியும்.
மே 20 ஆம் தேதி எஸ்பிஐ வங்கி கிளைகளுக்கு அனுப்பிய அறிவிப்பில், மக்களிடம் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் சேவைக்கு எவ்விதமான படிவமும், எவ்விதமான அடையாள அட்டையும் பெற தேவையில்லை என அறிவித்துள்ளது. இதனால் 2000 ரூபாய் வைத்துள்ள மக்கள் டெபாசிட் செய்தாக வேண்டிய கட்டாயம் இல்லை, எளிதாக 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications