இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை திரை ரசிகர்களுக்கு பெரிய தீனியாக இருக்க போகிறது. விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படமும் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் பராசக்தி திரைப்படமும் வெளியாக இருக்கின்றன.
இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. விஜய் பொறுத்தவரை அவர் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதால் ஜனநாயகன் திரைப்படம் அவருடைய கடைசி திரைப்படம் ஆகும். கடைசி திரைப்படம் ரசிகர்கள் மிக உற்சாகமாக படத்தை எதிர்ப்பார்த்து பெரிய கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

பராசக்தி திரைப்படத்தைப் பொறுத்தவரை சிவகார்த்திகேயனின் கேரியரில் முக்கியமான ஒரு படமாக இருக்கப் போகிறது. அது மட்டுமல்ல இந்தி திணிப்பு என்ற தமிழக அரசியல் வரலாற்றை குறிக்கும் மிக முக்கியமான ஒரு படமாக இருக்க போகிறது என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பும் வலுவாக இருக்கிறது.
ஏற்கனவே சமூக வலைதளங்களில் இருதரப்பு ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு பதிவுகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில் அட்வான்ஸ் புக்கிங்கில் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கான டிக்கெட் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தை விட 12 மடங்கு அதிகமாக விற்பனையாகி இருக்கிறது என மின்ட் தளம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.
Sacnilk என்ற தளம் படங்களில் அட்வான்ஸ் புக்கிங் விவரங்களை பின் தொடர்ந்து தகவல் வெளியிடுகிறது. இதன் படி ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங் விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன . இந்த திரைப்படத்திற்கு இதுவரை 2,90,043 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மொத்தம் 2329 ஷோக்களுக்காக முதல் நாளுக்கான அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் நடைபெற்றது, சராசரியாக ஒரு டிக்கெட்டின் விலை 215 ரூபாய் என்றும் வைத்து பார்க்கும் போது மொத்தம் 7.62 கோடி ரூபாய்க்கு டிக்கெட் விற்பனையகி இருக்கின்றன என அந்த செய்தி குறிப்பிடுகிறது.
இதில் அதிகபட்சமாக தமிழ் பதிப்பிற்கு 2,89,967 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 7. 61 கோடி ரூபாய்க்கு டிக்கெட்கள் பதிவாகி இருக்கின்றன. அதே போல புக் மை ஷோ தளத்தில் டிக்கெட் முன்பதிவு விவரங்களின் படி மிண்ட் தளம் வெளியிட்டுள்ள செய்தியில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,31,000 டிக்கெடுகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
பராசக்தி திரைப்படத்திற்கு 10,300 டிக்கெடுகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதே போல இண்டிரஸ்ட் காட்டி இருப்பவர்களின் எண்ணிக்கையிலும் ஜனநாயகன் திரைப்படம் முன்னணியில் இருக்கிறது. ஜனநாயகன் படத்திற்கு தென்னிந்திய சந்தையில் அதிக டிக்கெடுகள் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 2.53 கோடி ரூபாய்க்கு டிக்கெட் விற்பனையாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications