தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் மற்றும் TVK கட்சி தலைவருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் தேர்தலுக்கு முன்பே ரிலீஸ் ஆகுமா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளது.
தேர்தல் நடக்கும் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வந்ததுள்ளதால், விஜய் அரசியல் பின்னணியில் உருவான 'ஜன நாயகன்' திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் சிக்கல் உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. எப்படி..?

சிபிஐ விசாரணைக்கு பிறகு விஜய்-யின் ரியாக்ஷன்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையை முடித்துக்கொண்டு வெளியே வந்த விஜய், கருப்பு நிற உடையில் காரின் சன் ரூஃப் வழியாக நின்றபடி ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை சிரித்த முகத்துடன் பார்த்து கையசைத்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில், விஜய்-க்கு சிபிஐ விசாரணைக்கு பின் வெளிப்படுத்திய இந்த ரியாக்ஷன் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறை
இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததன்படி தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெறும்.
இந்த அறிவிப்புடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் (Model Code of Conduct) உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிட இருப்பதால், அவருடைய அரசியல் சார்ந்த திரைப்படம் தேர்தல் காலத்தில் வெளியானால் அது தேர்தல் விதிமுறைகளை பாதிக்கலாம்.
'ஜன நாயகன்' படத்திற்கு ஏற்கனவே தடைகள்
ஜன நாயகன் திரைப்படம் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ளது. சுமார் ரூ.500 கோடி செலவில் தயாராகியுள்ள இந்த படம் முதலில் 2026 ஜனவரி 9 அன்று வெளியாக திட்டமிடப்பட்டது.
ஆனால் மத்திய திரைப்பட தனிக்கை அமைப்பின் (CBFC) ஆய்வு குழு பரிந்துரையை ஏற்காததால் படம் வெளியீடு தாமதமானது. இதற்காக தயாரிப்பாளர்கள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாலும் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் அமேசான் ப்ரைம் உடன் செய்யப்பட்ட OTT ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து தாமதம்
பின்னர் ஜனநாயகன் தயாரிப்பாளர்கள் மனுவை திரும்பப் பெற்று படத்தை மறுபரிசீலனை குழுவுக்கு அனுப்பினர். மார்ச் 9 அன்று நடைபெற இருந்த சென்சார் திரையிடல், குழு உறுப்பினர் ஒருவர் உடல்நலக்குறைவால் ரத்து செய்யப்பட்டது.
மறுதிரையிடல் மார்ச் 17ஆம் தேதி வாக்கில் நடைபெறலாம் என கூறப்பட்டாலும் அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ஏப்ரல் 30க்கு முன் வெளியாவது சாத்தியமில்லை என கணிக்கப்படுகிறது.
தேர்தலும், திரைப்படமும்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் மே 4 வரை அமலில் இருக்கும். இதனால் அரசியல் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய திரைப்படங்கள் தேர்தல் காலத்தில் வெளியாவதை தேர்தல் ஆணையம் பொதுவாக கட்டுப்படுத்தும் நடைமுறை உள்ளது.
உதாரணமாக 2019 பொதுத் தேர்தலின் போது விவேக் ஓப்ராய் நடித்த பிரதமர் நரேந்திர மோடி என்ற அவரின் பயோபிக் படம், ராம் கோபால் வர்மாவின் லட்சுமி-யின் என்டிஆர் படம், தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே சந்திரசேகர ராவ்-ன் பயோபிக் படமான Udyama Simham உள்ளிட்ட சில அரசியல் திரைப்படங்கள் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே வெளியிட அனுமதிக்கப்பட்டது.
அதேபோல், தற்போதைய சூழ்நிலையை பார்க்கும் போது'ஜன நாயகன்' திரைப்படம் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு அதிகம் என சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் கூறுகிறது.
More From GoodReturns

TVK தலைவர் விஜய்-யின் சொத்து விவரங்கள்.. இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா.. மொத்தம் ரூ.625 கோடி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications