விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜனநாயகன் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக அவர் படங்களில் நடிப்பதை விடுவதாக அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பதால் ஜனநாயகன் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. ஜனநாயகன் பட குழுவினர் மட்டுமில்லாமல் நடிகர் விஜயின் நண்பர்கள், பிரபல இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவின் புகைப்படங்களும் அதில் நடிகர் விஜய் நடனமாடிய காட்சிகளும் தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் கடைசி படமான ஜனநாயகன் படத்தை விஜய் ரசிகர்கள் பலரும் மிக எமோஷனலாக கருதுகின்றனர். One last time என சமூக வலைதளங்களில் பதிவிடுவதை பார்க்க முடிகிறது.
விஜய் ரசிகர்கள் ஜனநாயகன் படத்தை பெரிய வெற்றி படமாக மாற்றிவிடுவார்கள். இந்த சூழலில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாவதற்கு முன்னதாகவே பல கோடிகளை வருமானமாக ஈட்டியிருக்கிறது. இந்த படம் வெளியிடுவதற்கு முன்னதாகவே பல்வேறு உரிமங்களும் விற்பனை செய்ததன் மூலம் மட்டுமே 325 கோடி ரூபாய் வசூலை குவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமிழ்நாட்டில் தியேட்டர் வெளியீட்டு உரிமம் மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறதாம். தமிழ்நாட்டில் ஒரு திரைப்படத்தின் தியேட்டர் உரிமம் உச்சபட்ச தொகைக்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல்முறை என சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல வெளிநாடுகளில் படத்தை விநியோகம் செய்வதற்கான உரிமம் மட்டும் 80கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளில் இதுவரை இல்லாத அளவு விஜய் படத்திற்கு டிமாண்ட் அதிகரிப்பதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

ஜனநாயகன் படத்தை வெளியிட ஓடிடி தளங்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் 110 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் பிரைம் நிறுவனம் இதனை வாங்கி இருப்பதாக ஐஎம்டிபி தளத்தின் செய்தி கூறுகிறது . அடுத்ததாக ஆடியோ மற்றும் மியூசிக் உரிமங்கள் 35 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் பார்க்கும் போது படம் வெளியாவதற்கு முன்னதாகவே 325 கோடிக்கு வர்த்தகம் செய்திருக்கிறது. சேட்டிலைட் ஒளிபரப்பு உரிமத்தை பெறுவதில் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைகாட்சிகள் இடையே கடும் போட்டி இருந்த நிலையில் 65 கோடி ரூபாய் கொடுத்து ஜீ தமிழ் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை வாங்கிவிட்டது என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி சுட்டிக்காட்டுகிறது.


Click it and Unblock the Notifications