இன்னும் 1 வருடத்துக்கு இப்படிதானா.. இந்தியாவின் நிலை என்னவாகும்.. ஜெனட் யெலன் இப்படி சொல்லிட்டாரே!
அமெரிக்க மத்திய வங்கி கூட்டமானது வரவிருக்கும் நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக நடந்த கூட்டத்தில், அமெரிக்க கருவூலத் துறை செயலர் ஜெனட் யெலன், அமெரிக்காவின் பணவீக்க விகிதமானது 2023ம் ஆண்டில் கணிசமாக குறையும் என கணித்துள்ளார்.
அடுத்த ஆண்டின் இறுதிக்குள் நீங்கள் நிச்சயம் பணவீக்கம் குறைவதை காண்பீர்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
ரெசசன் வாய்ப்பு
ரெசசன் குறித்து, ரெசசன் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது என, முன்னாள் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் என் பார்வையில் பணவீக்கத்தினை குறைக்க அவசியமான ஒன்று தேவை என கூறியுள்ளார்.
யெலனின் கருத்து?
யெலனின் இந்த கருத்தானது மத்திய வங்கியின் கூட்டம் நாளையும், நாளை மறு நாளும் நடைபெறவுள்ள நிலையில் வட்டி விகிதம் அதிகரிப்பானது மெதுவான வேகத்தில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வந்துள்ளது. ஏற்கனவே 4 முறை 75 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த முறை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரம் சரிவு
மேலும் இது குறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், பொருளாதார வளர்ச்சி என்பது கணிசமாக குறைந்து வருகின்றது. அதே சமயம் பணவீக்கம் என்பது குறைந்து வருகின்றது. தொழிலாளர் சந்தையானது இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமானதாக உள்ளதாகவும் CBS-மிடம் தெரிவித்துள்ளது.
பணவீக்கம் சரிவினை காணலாம்
பணவீக்கம் என்பது குறுகிய காலத்திற்கு அதிகமாக இருக்கலாம். அரசு இதில் இருந்து பணவீக்கத்தினை கட்டுப்படுவது எப்படி என்பதன் அவசியத்தினை கற்றுக் கொண்டுள்ளது. ஏற்றுமதி செலவினங்கள் குறைந்துள்ளது. டெலிவரி கட்டணங்கள் தளர்த்தப்பட்டுள்ளன. வரும் ஆண்டில் பணவீக்கம் சரிவினை காணலாம் என நான் நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
வட்டி அதிகரிப்பு
தொடர்ந்து அமெரிக்காவின் பணவீக்கம் என்பது சரியத் தொடங்கியிருந்தாலும், தொடர்ந்து இன்னும் அதிகமாகவே காணப்படுகின்றது. ஆக தற்போதைக்கு வட்டி அதிகரிப்பு என்பது மெதுவாக இருந்தாலும், இது அடுத்த ஆண்டும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடன் வட்டி அதிகரிக்கலாம்
இதன் எதிரொலி இந்தியாவிலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு இந்தியாவிலும் வட்டி அதிகரிப்பினை தூண்டலாம். இது மேற்கொண்டு இந்திய சந்தையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவில் வட்டி விகிதமானது உச்சத்தில் இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு அதிகரிக்கும்போது, இந்தியாவில் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம்.


Click it and Unblock the Notifications