தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் ஹிந்தி சினிமா-வையும் ஒரு காலத்தில் ஆட்டிப்படைத்த மறைந்த லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி-யின் அவர்களின் நினைவுகளைச் சுமக்கும் சென்னை இல்லத்தை, அவரது மகள் நடிகை ஜான்வி கபூர் வாடகைக்கு விட முடிவு செய்துள்ளார்.
தாய் ஸ்ரீதேவி போலவே மகள் ஜான்வி கபூர்-ம் பாலிவுட் திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளார், சமீபத்தில் தெலுங்கு படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். பாலிவுட்டில் இருந்து தென்னிந்திய சினிமாவுக்கு வந்துள்ள ஜான்வி கபூர் அவருடைய தாயை போல் கலக்குவார் என நம்பப்படுகிறது.

ஜான்வி கபூர் பாலிவுட்டில் தீபிகா படுகோன், ஆலியா பட் போல முன்னணி நடிகையாக இல்லாவிட்டாலும் சமுகவலைத்தலத்தில் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இன்ஸ்டாவில் இவர் போடும் ஹாட் மற்றும் கியூட் போட்டோவுக்கு லைக்-கள் பறக்கிறது.
இன்ஸ்டாவில் சுமார் 24.1 மில்லியன் பாலோவர்களை வைத்துள்ள இவர், பல விளம்பரங்களிலும் நடித்துக் கலக்கி வருகிறார். தந்தை திரைப்படங்களைத் தயாரிப்பதில் பிசியாக இருந்தாலும், சென்னை-க்கு அவ்வப்போது தனது வீட்டு-க்கு ஜான்வி கபூர் மற்றும் போனி கபூர் வருகிறார்கள்.

ஜான்வி கபூர் தனது தாய் ஸ்ரீதேவி வாங்கி, வாழ்ந்த, அனுபவித்த வீட்டை சில வருடங்களுக்கு முன்பு பெரும் செலவில் புதுப்பிக்கப்பட்டன. புதுப்பிக்கப்பட்ட பின்பு ஜான்வி கபூர் தனது சென்னை வீட்டை ஒரு பிரபல பேஷன் பத்திரிக்கைக்கு வாக்கின் டூர் கொடுத்தார். இப்போது இந்த சென்னை வீடு இந்தியா முழுவதும் டிரெண்டானது.
இந்த நிலையில் ஜான்வி கபூர் தற்போது இந்த வீட்டை பிரபல தங்குமிட புக்கிங் சேவை வழங்கும் ஏர்பிஎன்பி தளத்தின் "Icons" பிரிவில் பட்டியலிட்டுள்ளார். உலக பிரபலங்களின் சொகுசு இல்லங்களை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் இந்த பிரிவில், ஜான்வி கபூரின் சென்னை இல்லம் இடம் பிடித்துள்ளது.

இந்த இல்லம், ஸ்ரீதேவி அவர்களால் வாங்கப்பட்ட முதல் வீடு என்ற சிறப்பை பெறுகிறது. ஜான்வி கபூருக்கு மட்டுமல்லாமல், ஸ்ரீதேவி ரசிகர்களுக்கும் உணர்வுப்பூர்வமான இடமாக இது விளங்குகிறது. உலகெங்கிலும் இருந்து சேகரிக்கப்பட்ட கலைப்பொருட்கள் மற்றும் அழகிய வேலைப்பாடுகளுடன், ஸ்ரீதேவி தனது தனித்துவமான குணத்தையும், விருப்பத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த வீட்டை அலங்கரித்திருந்தார்.
சில வருடங்களுக்கு முன்பு பராமரிப்பு காரணங்களுக்காகச் சிறிது காலம் மூடப்பட்டிருந்த இந்த இல்லம், தயாரிப்பாளர் போனி கபூரின் மேற்பார்வையில் கண்கவர் புதுப்பொலிவு பெற்றுள்ளது. போனி கபூரின் சென்னை அலுவலகம் இந்த இடத்திலேயே இயங்கி வருகிறது.

மேலும், ஸ்ரீதேவியின் ஆரம்பக் கால ஓவியங்களில் ஒன்று, இந்த இல்லத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வீட்டில் ஒரு "ரகசிய அறை" இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, இதனாலேயே இங்கு தங்க பலருக்கும் ஆர்வத்தைத் தூண்டும்.

ஆனால் எல்லோராலும் இந்த ஐகானிக் வீட்டில் தங்கிவிட முடியாது. ஒருபக்கம் வாடகை மிகவும் அதிகமாக இருப்பதை தாண்டி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஏர்பிஎன்பி பயனர்கள் மட்டுமே வாய்ப்பைப் பெறுவார்கள். காரணம் ஏர்பிஎன்பி தளத்தின் "Icons" பிரிவில் பட்டியலிட்டுள்ள வீட்டுகளில் தங்குவதற்குச் சிலருக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும்.
நீங்க ஜான்வி கபூர் அல்லது ஸ்ரீதேவி ரசிகராக இருந்தால், இது சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க. உடனே ஏர்பிஎன்பி ஆப் டவுன்லோடு செய்யுங்க.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications