இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட காலண்டர் படி, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வங்கிகளுக்கு 14 விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கியின் நாட்காட்டியின்படி, அடுத்த மாதம் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகள் என மொத்தம் 14 வங்கி விடுமுறை உள்ளது.
ஜனவரி 2023
ஜனவரியில் புத்தாண்டு, குரு கோவிந்த் சிங் ஜெயந்தி, மிஷனரி தினம், சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி, மகரச் சங்கராந்தி, பொங்கல், குடியரசு தினம் போன்ற பல முக்கியமான பண்டிகைகள் நாட்டின் பல பகுதிகளில் பெரிய அளவில் கொண்டாடப்பட உள்ளது.
பண்டிகை நாட்கள்
இந்தப் பண்டிகை நாட்களில் அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் மூடப்படாது என்றாலும், எந்த மாநிலத்தில் எந்த நாளில் விடுமுறை அளிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
வங்கி சேவைகள்
வங்கி சேவைகள் தற்போது அதிகளவில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நிலையில் வங்கிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் பெரிய அளவில் குறைந்துள்ளது. ஆனாலும் வீட்டுக் கடன், வாகன கடன், நகைக் கடன் ஆகியவற்றுக்கு வங்கிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
நகை கடன்கள்
சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் நகை கடன்கள் பொதுவாக அவசர காலகட்டத்தில் பயன்படுத்துவார்கள். இப்படியிருக்கையில் விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.
விடுமுறை முழு விபரம்
2023 விடுமுறை நாட்களின் முழுப் பட்டியல் இதோ.
ஜனவரி 1 : புத்தாண்டு தினம் (அனைத்து மாநிலங்களிலும்) (ஞாயிறு)
ஜனவரி 5 : குரு கோவிந்த் சிங் ஜெயந்தி
ஜனவரி 11 : மிஷனரி தினம் (மிசோரம் மட்டும்)
ஜனவரி 12 : சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி
ஜனவரி 14 : மகரச் சங்கராந்தி (இரண்டாம் சனிக்கிழமை)
ஜனவரி 15 : பொங்கல்/மாக் பிஹு (ஞாயிறு)
ஜனவரி 22 : சோனம் லோசர் (சிக்கிம் மட்டும்) (ஞாயிறு)
ஜனவரி 23 : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்தி
ஜனவரி 25 : மாநில தினம் (ஹிமாச்சல பிரதேசம்)
ஜனவரி 26: குடியரசு தினம் (அனைத்து மாநிலங்களிலும்)
ஜனவரி 31 : மீ-டேம்-மீ-ஃபை (அஸ்ஸாம் மட்டும்)
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications