சென்னை: ஆசியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான ஜப்பான், நீண்ட காலமாகச் சுருங்கி வரும் அதன் உள்நாட்டு நுகர்வோர் சந்தையாலும், வயதானோர் எண்ணிக்கை அதிகரிப்பாலும் அதன் பொருளாதாரம், வர்த்தகம் என அனைத்தும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனால், ஜப்பான் தனது முதலீட்டுத் திட்டங்களை மறுசீரமைப்பு செய்து நிலையான தேர்வுகளை நோக்கிச் செல்ல முடிவு செய்துள்ளது. ஜப்பான் நாட்டின் அளவும், மக்கள் தொகையும் மிகவும் சிறியது, ஆனால் ஆசியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக உள்ளது.

இதற்கு முக்கியமான காரணம் ஜப்பான் நாட்டின் இன்னோவேஷன், தயாரிப்புகளின் தரம் உயர்தரமானது. இதை அடிப்படையாக வைத்து உலக நாடுகள் உற்பத்தி தளத்தையும், வர்த்தகத்தையும் கொண்டு தனது நாட்டின் வளத்தைப் பெருக்கும் கட்டமைப்பு கொண்டு உள்ளது. தற்போது ஜப்பான் நாட்டில் உள்நாட்டு நுகர்வு பெரிய அளவில் குறைந்துள்ளதால் மாற்றச் சந்தையைத் தேட துவங்கியுள்ளது.
இந்தச் சூழலில், உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாடான இந்தியா, ஜப்பான் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது என, நோமுரா நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
நேரடி வெளிநாட்டு முதலீடு (FDI): வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக இந்தியாவில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஜப்பானிய நிறுவனங்கள் வெளிநாட்டுப் பங்குகளில் (டிசம்பர் 2022 நிலவரப்படி) முதலீடு செய்வதில், வளரும் நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது.
லாபம் தரும் சந்தை: இது, நிலையான லாபத்தைத் தேடும் ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு இந்தியா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறி வருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. இதன் மூலம் ஜப்பான் முதலீட்டாளர்களும், ஜப்பான் நிறுவனங்களும் இந்தியாவில் தொடர்ந்து முதலீடு செய்வதைக் காட்டுகிறது.
மேலும், ஜப்பானிய தனிநபர் முதலீட்டாளர்களும் தங்களுடைய சொந்த முதலீட்டு டிரஸ்ட்-கள் மூலம் இந்திய பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் விளைவாக, வளரும் சந்தைப் பொருளாதாரங்கள் வரிசையில், இந்தியா தற்போது முதலிடத்தில் உள்ளது.
சீனா வேண்டாம்ப்பா: பொதுவாக ஜப்பானிய முதலீடுகள் மூலம் அதிகம் பயன்பெறுவது சீனா தான், ஆனால் சீனாவில் தற்போது ரியல் எஸ்டேட் துறை பிரச்சனை, வங்கி நிலையற்ற தன்மை, மக்களின் நிதி நிலை, அமெரிக்கா - சீனா மத்தியில் மீண்டும் வெடித்துள்ள வர்த்தக போர் அச்சம் ஆகியவை முதலீட்டாளர்கள் கண்ணோட்டத்தில் ரிஸ்க் ஆக சீனா மாறியுள்ளது.
முக்கிய துறை இந்தியாவில், ஜப்பான் முதலீடுகள் அதிகம் பெறும் துறை என்றால் அது உற்பத்தி துறை தான், அதிலும் குறிப்பாக போக்குவரத்துத் துறையில் மொத்த முதலீட்டில் 35.1 சதவீதம் பெற்றுள்ளது. அதை தொடர்ந்து மெஷினரி துறையில் 10.5 சதவீதம், கெமிக்கல் மற்றும் பார்மா துறையில் 6.5 சதவீதம் பெற்றுள்ளது.
இது அனைத்தும் 2022 தரவுகள் தான், கடந்த ஒருவருடத்தில் மாருதி சுசூகி முதல் மெட்ரோ, கட்டுமானம், நிதி துறை வரையில் பல துறையில் ஜப்பான் முதலீடுகள் குவிந்துள்ளது.
வேகமான பொருளாதார வளர்ச்சி: இந்தியா, உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. இது, நீண்ட காலத்திற்கு நிலையான லாபத்தை உறுதி செய்யும் முதலீட்டுத் திட்டங்களைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக உள்ளது.
இளம் மக்கள் தொகை: இந்தியா உலகின் இளம் மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. இது எதிர்கால நுகர்வோர் தேவையை அதிகரிக்கச் செய்யும், இதன் மூலம் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் லாபத்திற்கும் வழிவகுக்கும்.
அரசின் முதலீட்டு சீர்திருத்தங்கள்: இந்திய அரசு, அந்நிய முதலீட்டை ஈர்க்கும் வகையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது, ஜப்பான் போன்ற வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்வதை எளிதாக்குகிறது.
எதிர்காலம்:
ஜப்பான் மற்றும் இந்தியா இடையேயான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகள், எதிர்காலத்தில் மேலும் வலுப்பெறவே வாய்ப்புள்ளது. இந்த இரு நாடுகளின் கூட்டு முயற்சி, உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் நாட்டின் பல வளர்ச்சி திட்டங்களுக்கு ஜப்பான் நேரடியாகக் கடன் உதவிகளை வழங்கி வருகிறது.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications