ஜப்பான் நாடு பரப்பளவில் மிகவும் சிறிய நாடாக இருந்தாலும் இந்நாட்டின் பொருளாதார மதிப்பு, தொழில்நுட்ப திறன் ஆகியவை மிகவும் அதிகம்.
இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் நாணயமும் இந்திய நாணயத்தைப் போலவே அமெரிக்க டாலர் ஆதிக்கத்தால் 2022 ஆம் ஆண்டு முதல் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
பங்குச்சந்தை முதலீடுகள் அதிகப்படியான தடுமாற்றத்தைப் பதிவு செய்து வருகிறது, ஆனால் இது உலகில் பெரும்பாலான நாடுகளில் இருக்கும் பொதுவான பிரச்சனை.
ஆனால் ஜப்பான் கடந்த சில வருடங்களாக ஒரு முக்கியமான பிரச்சனையை எதிர்கொண்டு வருவது மட்டும் அல்லாமல் இது அந்நாட்டின் எதிர்காலத்திற்கும் பெரும் தலைவலியாக மாறி வருகிறது.
ஜப்பான்
ஜப்பான் நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கையில் வரலாற்றிலேயே மிகப்பெரிய சரிவைக் எதிர்கொண்டு உள்ளது. 2021 ஆம் ஆண்டின் தரவுகள் அடிப்படையில் அந்நாட்டு மக்கள் தொகை 644,000 குறைந்து 125.5 மில்லியனாக உள்ளது, இது தொடர்ந்தால் ஜப்பான் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறி தான் என எலான் மஸ்க் மட்டும் அல்லாமல் பல பெரும் தலைவர்கள் கடந்த ஆண்டுத் துவக்கத்தில் எச்சரித்தனர்.
ஜப்பான் ஆய்வு
உலக நாடுகளின் கருத்துக்குப் பின்பு ஜப்பான் பல வகையில் ஆய்வு செய்து மக்கள் தொகை தொடர்பாக முக்கியமான முடிவை எடுத்தது. இந்த ஆய்வில் நாட்டின் டோக்கியோ-வை ஒப்பிடுகையில் பிற நகரங்களில் மக்கள் தொகை தொடர்ந்து வேகமாகக் குறைந்து வருவதைக் கண்டறிந்தது.
டோக்கியோ
இதை முதல் கட்டமாகச் சரி செய்யும் வகையில் ஜப்பான் அரசு கிரேட்டர் டோக்கியோ-வை விட்டு வெளியேறிப் பிற நகரங்களுக்கு இடம்பெறும் குடும்பங்களுக்கு, ஒரு குழந்தைக்கு 1 மில்லியன் யென் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஏற்கனவே இருந்தாலும் இதன் தொகை தற்போது 3 லட்சம் யென்-ல் இருந்து 10 லட்சம் யென் ஆகத் தடாலடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.
10 லட்சம் யென்
ஜப்பான் நாட்டில் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் மக்கள்தொகை விகிதம் குறைந்து வருவதைக் கண்டறிந்த பின்பு அந்நாட்டின் 10 லட்சம் யென் வரையிலான உதவித் தொகை திட்டத்தை உருவாக்கியது. இதன் மூலம் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து அதிகமான மக்கள் டோக்கியோ, ஒசாகா மற்றும் பிற பெரிய நகரங்களுக்கு வருவது குறைக்க முடியும்.
வேலை வாய்ப்புகள்
நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் முதியவர்கள் என்பதால், வேலை வாய்ப்புகள் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரத்திற்காக நகரங்களுக்கு இடம்பெயர்வது தொடர்ந்து அதிகரித்து வருவதால் இப்பகுதிகளில் மக்கள்தொகை குறைந்து வருகிறது. இந்த மக்கள் தொகை இடம்பெயர்வு கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பாலும் ஏற்பட்டு உள்ளது.
செக்
இந்த 10 மில்லியன் யென் தொகைக்காக யாரவது டோக்கியோ விட்டு வெளியேறுவதாகக் கூறி விட்டு வெளியேறி, அடுத்த சில மாதங்கள் அல்லது வருடத்தில் வந்துவிட்டால் இப்பணத்தை அரசு திரும்பப் பெற்றுக்கொள்ளும்.
ரிமோட் வொர்கிங்
இன்று ரிமோட் வொர்கிங் கலாச்சாரம் அதிகமாகிவிட்ட நிலையில் பிற நகரங்களுக்குச் சென்று டோக்கியோ-வில் இருக்கும் நிறுவனத்திற்குப் பணியாற்றுவது பெரிய விஷயம் இல்லை. இதனால் 2027 ஆம் ஆண்டுக்குள் 10000 பேர் டோக்கியோ விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளது.
மக்கள் குஷி
ஜப்பான் அரசு டோக்கியோ விட்டு வெளியேறும் மக்களுக்கு முன்பு 3 லட்சம் யென் மட்டுமே அளித்த போது யாரும் வெளியேற தயாராக இல்லை, ஆனால் இப்போது 10 லட்சம் யென் ஆகத் தடாலடியாக உயர்த்தப்பட்ட நிலையில் அதிகளவிலான மக்கள் முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications