ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை அருகில் உள்ள கும்மிடிப்பூண்டி தாலுக்காவில் பெருவயல் என்னும் கிராமத்தில், ரூம் ஏர் கண்டிஷனர் (ஆர்ஏசி) மற்றும் கம்ப்ரஸர் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கவுள்ளது.
மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா நிறுவனம் அமைக்க உள்ள இப்புதிய தொழிற்சாலைக்காக சுமார் 1,891 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இந்த முதலீட்டில் 100 சதவீத தொகையை அன்னிய நேரடி முதலீட்டின் வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது.

மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா நிறுவனம் இந்த புதிய உற்பத்தி தளத்தை சுமார் 52.4 ஏக்கர் பரப்பளவில் அமைக்க உள்ளது மட்டும் அல்லாமல் இந்த தொழிற்சாலையில் சுமார் 2,000 பேரை நேரடியாக பணியில் அமர்த்த உள்ளது இந்த ஜப்பான் நிறுவனம். இந்த தொழிற்சாலையில் ஒரு சிறப்பு மிக்க விஷயம் உள்ளது.
மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா சென்னைக்கு அருகில் முதலீடு செய்யப்போவதாக அறிவிக்கப்பட்ட போது இத்தொழிற்சாலைகளில் ஏறக்குறைய 60 சதவீத ஊழியர்களை பெண்களை பணியில் அமர்த்துவதற்கு நிறுவனம் உறுதியளித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் பணியில் அமர்த்தப்படும் பெண்களுக்கு போதுமான பயிற்சி மற்றும் கற்றல்-ஐ அளிக்கவும் மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் தமிழ்நாட்டின் முக்கிய எலக்ட்ரானிக் உற்பத்தி நிறுவனங்களின் மையமாக இருந்து வருகிறது, இப்போது இப்பகுதியில் ஜப்பான் நாட்டின் மிட்சுபிஷி புதிய தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்து மூலம் இப்பகுதியின் உற்பத்தி மற்றும் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்க உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் சென்னை துறைமுகத்துடன் தொடர்புடைய வர்த்தகத்தை ஈர்க்க வேண்டும் என்ன தமிழ்நாடு எல்லைக்கு அருகில் உள்ள ஸ்ரீ சிட்டி தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீ சிட்டியை ஒட்டி அமைந்துள்ள கும்மிடிப்பூண்டியில் ஒரு இன்டஸ்ட்ரியல் கிளஸ்டரை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், இந்த பகுதியில் தொழிற்சாலைகளை அமைக்கும் நிறுவனங்கள் குறைந்த செலவு மற்றும் வளமான தொழிலாளர் வளங்கள் மூலம் பயனடைய முடியும். இதேபோல் இப்பகுதியில் தொழிற்சாலைகளை ஈர்க்க மாநில அரசு பல முக்கிய முயற்சிகளை எடுத்து வருகிறது.
இப்புதிய தொழிற்சாலை அமைப்பது குறித்து மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்படவுள்ளது.
மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா இப்புதிய தொழிற்சாலையில் முதல் கட்டமாக ரூம் ஏர் கண்டிஷனர் (ஆர்ஏசி) மற்றும் கம்ப்ரஸர் தயாரிக்க உள்ள நிலையில் வரும் காலத்தில் Precision Air Conditioning (PAC) and Variable Refrigerant Flow (VRF) ஆகியவற்றை தயாரிக்க உள்ளது. இதோடு இந்த தொழிற்சாலையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையத்தையும் அமைக்க உள்ளது மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா. இந்த தொழிற்சாலை அக்டோபர் 2025 க்குள் செயல்படத் தொடங்கும்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications