தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் வழிகாட்டுதலின் கீழ் 2022 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கையின் ஒரு பகுதியாக அரசு எதிர்கால டெக் துறையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்டு ஜிசிசி கொள்கையை அறிமுகம் செய்தது. இந்த கொள்கை தற்போது மாநிலத்தின் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளும் அட்சய பாத்திரமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் தற்போது அனைத்து வளரும் மாநிலங்களிலும் வெளிநாட்டு நிறுவனங்களின் ஜிசிசி அலுவலகங்களை ஈர்ப்பது தான் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு உள்ளது. இந்த நிலையில் தான் கர்நாடகா உட்பட பல மாநிலங்கள் தனியாக ஜிசிசி கொள்கையை அறிமுகம் செய்து வருகிறது. சென்னையில் தற்போது இந்தியாவின் மொத்த ஜிசிசிக்களில் 15% ஐக் கொண்டுள்ளது.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் தான் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் ஜப்பான் நாட்டின் மூன்று மெகா வங்கிகளில் ஒன்றான மிசுஹோ (Mizuho), தனது உலகின் மிகப்பெரிய ஜிசிசி மையத்தை சென்னையில் அமைக்க முடிவு செய்துள்ளது. இது சென்னையின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்காட்டாகும்.
சென்னையின் வளர்ச்சிக்கு ஜப்பான் நிறுவனங்களின் முதலீடு மிகவும் முக்கியமானது. மிசுஹோவின் முதலீடு சென்னையை ஒரு முன்னணி வணிக மையமாக மாற்றுவது மட்டும் அல்லாமல் Mizuho-வின் சர்வதேச வளர்ச்சிக்குச் சென்னையில் இருந்து சேவைகளும், ப்ராடெக்ட்களும் உருவாக்கப்பட உள்ளது.

இந்த முதலீட்டின் மூலம் சென்னையில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும், இது சென்னையின் சர்வதேச அளவிலான முக்கியத்துவத்தை அதிகரிக்கும். ஏற்கனவே சென்னை பின்டெக் துறையில் இந்தியாவிலேயே முன்னோடியாக இருக்கும் வேளையில் Mizuho-வின் வருகை மிகவும் முக்கியமானது.
தமிழ்நாடு அரசு தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில் மிசுஹோ (Mizuho) உலகின் மிகப்பெரிய ஜிசிசி மையத்தை சென்னையில் அமைக்க முடிவு செய்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த முதலீடு தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு புது சக்தியை கொடுக்கும்.

மிசுஹோ (Mizuho) உலகின் மிகப்பெரிய ஜிசிசி மையத்தை சென்னையில் அமைக்க தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சகர் டிஆர்பி ராஜா முன்னிலையில் மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications