ஜப்பானின் 3வது பெரிய வங்கியான மிசுஹோ நிதிச் சேவைக் குழு, சென்னையில் உலகளாவிய திறன் மையம் அதாவது GCC நிறுவியுள்ளது. Mizuho குளோபல் சர்வீசஸ் (MGS), தற்போது 250 பணியாளர்களுடன் சென்னை அலுவலகத்தை இயக்கி வரும் வேளையில், 2025க்குள் ஊழியர்கள் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
மிசுஹோ நிதிச் சேவைக் குழு தனது சர்வதேச வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் தீவிரமாக இறங்கியிருக்கும் காரணத்தால் தொழில்நுட்ப மேம்பாடுகள், புதிய கட்டமைப்புகள் முதல் வாடிக்கையாளர் சேவை வரையில் பலவற்றை மேம்படுத்தவும், விரிவாக்கம் செய்யும் பணியில் உள்ளது.

இந்தியாவின் பின்டெக் ஹப் ஆக மாறியிருக்கும் சென்னையில் அடுத்தடுத்து பல முன்னணி நிதி சேவை நிறுவனங்கள் தனது அலுவலகத்தை அமைத்து வரும் வேளையில் ஜப்பானின் 3வது பெரிய வங்கியான மிசுஹோ பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஏற்கனவே இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் BFSI பிரிவில் உலகம் முழுவதும் இருக்கும் முன்னணி வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பென்ஷன் பண்ட் நிறுவனங்கள் எனப் பலவற்றுக்குத் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வரும் வேளையில் தற்போது வெளிநாட்டு நிறுவனங்களே நேரடியாகச் சென்னையில் சொந்த அலுவலகத்தை அமைத்து வருகிறது.
சென்னையில் இருக்கும் ஜிசிசி அலுவலகங்களின் பட்டியலை பார்த்தால் உங்களுக்கே புரியும். ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு, Natwest, சிட்டி வங்கி, வெல்ஸ் பார்கோ, பார்க்லேஸ், பேங்க் ஆஃப் அமெரிக்கா, உலக வங்கி, HSBC, Fidelity, BNY மெலன், BNP பரிபாஸ் ஆகியவை சென்னையில் ஜிசிசி அலுவலகத்தை வைத்துள்ளது. இப்போது ஜப்பான் Mizuho வந்துள்ளது, அடுத்ததாக ஜேபி மோர்கன், மோர்கன் ஸ்டான்லி, கோல்ட்மேன் சாக்ஸ் போன்றவை வரும் என நம்பிக்கை உள்ளது.
சென்னை ஆட்டோமொபைல் நகரம், ஸ்மார்ட்போன் நகரம், ஐடி நகரம் பல பெருமைகளைக் கொண்டு இருக்கும் வேளையில், தற்போது பின்டெக் நகரம் எனப் புதிய பெருமையைப் பெற்றுள்ளது. சென்னை பின்டெக் சிட்டியாக மாற முக்கியமான காரணம் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த பின்டெக் கொள்கை.
மேலே குறிப்பிட்ட ஜிசிசி-களைத் தாண்டி சிறிய பின்டெக் நிறுவனங்கள், பின்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் என ஒட்டுமொத்த இந்தியாவிலும் இல்லாத பல நிறுவனங்கள் சென்னையைத் தேடி வந்து அலுவலகம் அமைத்துள்ளது.


Click it and Unblock the Notifications