ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய வங்கியான Mitsubishi UFJ Financial Group இந்தியாவில் முதலீடுகளை அதிகரித்து, விரிவாக்க பணிகளை செய்ய ரெடியாகிவருகிறது. இந்தியா, பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்து வருவதால், இதுதான் தங்களுக்கு ஆதாயம் பெற நல்ல நேரம் என்று திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது அந்த வங்கி.
ஜப்பானின் மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனமான Mitsubishi UFJ Financial Group கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் அதன் செயல்பாடுகளைத் துவங்கி மெல்ல மெல்ல மேம்படுத்தி வருகிறது. இதன் படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டியில் (GIFT City) தனது கிளையைத் திறந்தது. GIFT நகரம் என்பது நாட்டின் புதிய நிதி மையமாகவும் விளங்குகிறது.

குஜராத்தில் கிளை அலுவலகத்தைத் திறந்த பின்று Mitsubishi UFJ Financial Group நடுத்தர முதல் பிற்பகுதியில் இருக்கும் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்யப் புதிய நிதியை ஒதுக்கீடு செய்தது.
இதற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்திய ஃபின்டெக் நிறுவனமான டிஎம்ஐ ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பங்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய வங்கிகள் மற்றும் தனியார் பங்கு நிறுவனங்களும் இந்தியாவிற்குள் அடுத்தடுத்து நுழைகின்றன, இந்தியாவின் பொருளாதாரம் மார்ச் மாதத்துடன் முடிவடையும் நிதியாண்டில் 7% வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் எந்தொரு நாடும் இத்தகைய வளர்ச்சியைக் கொண்டு இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு முக்கிய மூலதனச் சந்தைகளில் இந்தியாவுக்கு மிகவும் உயர்வான இடம் கிடைத்துள்ளது, இதற்கான எடுத்துக்காட்டு தான் பங்குச்சந்தையின் தொடர் வளர்ச்சிப் பாதை. இந்த நிலையில் மிட்சுபிஷி வங்கியின் தலைமை செயல் அதிகாரி ஹிரோனோரி கமேசாவா ஒரு பேட்டியில் இந்தியாவைப் பொறுத்தவரைப் பொருளாதார வளர்ச்சி என்பது பிரச்சனையே இல்லை" என்று கூறினார்.
இந்தியா சர்வதேச வங்கிகளின் பேக் ஆபீஸ் செயல்பாட்டு மையம் அமைக்கச் சிறந்த இடமாகவும் செயல்படுகிறது. சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியா பலரின் விருப்ப இடமாகவும் மாறி வருகிறது. இதன் மூலம் சீனாவைத் தவிர்க்க விரும்பும் நாடுகளின் பணத்தை இந்தியா ஈர்க்கும் என்று நான் நினைக்கிறேன் எனவும் மிட்சுபிஷி வங்கியின் தலைமை செயல் அதிகாரி ஹிரோனோரி கமேசாவா கூறினார்.
மிட்சுபிஷி வங்கி வருகை மூலம் இந்திய வங்கிகளுக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லை, காரணம் பெரிய வங்கிகள் முதலீட்டுச் சேவைகள், வெளிநாட்டு நிறுவனங்களுக்கான நிதி ஆதாரத்தைத் திரட்டுதல், நிர்வாகம் செய்தல் ஆகிய பணிகளில் தான் அதிகளவில் இயங்கும்.
இதனால் ரீடைல் வங்கிகளில் எவ்விதமான பிரச்சனையும் இருக்காது, இதேபோல் இந்தியாவில் ரீடைல் வங்கி சேவையில் இயங்கும் வெளிநாட்டு வங்கிகள் எண்ணிக்கை மிகவும் குறைவு. சமீபத்தில் தான் அமெரிக்காவின் சிட்டி பேங்க் தனது ரீடைல் வங்கி சேவையை மூடியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications