கர்நாடக ஐடி நிறுவனத்தை கைப்பற்றிய ஜப்பான் NTT DATA.. அடுத்தது நம்ம கோயம்புத்தூர் தானா..?

இந்தியாவில் செயல்படும் முன்னணி உலகளாவிய ஐடி சேவை நிறுவனமான NTT DATA, உடுப்பியை தளமாகக் கொண்ட கிளவுட் இன்ஜினியரிங் பிரிவை சேர்ந்த நைவஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை அறிவிக்கப்படாத தொகைக்கு வாங்கியுள்ளது. இந்திய ஐடி துறையில் பொதுவாக பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை வாங்குவது என்பது மிகவும் அரிதாக நடக்க கூடிய விஷயம்.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் தான் உலகளாவிய வர்த்தக தேவையைப் பூர்த்தி செய்ய புதுமையான கிளவுட் சேவைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக NTT DATA நிறுவனம் Niveus Solutions என்ற நிறுவனத்தை வாங்கியுள்ளது.

கர்நாடக ஐடி நிறுவனத்தை கைப்பற்றிய ஜப்பான் NTT DATA.. அடுத்தது நம்ம கோயம்புத்தூர் தானா..?

நைவஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை கைப்பற்றுவது மூலம், NTT DATA அதிதிறமையான Google Cloud Platform (GCP) பொறியாளர்களின் குழுவை மொத்தமாக பெறுகிறது. இந்த நிபுணர்கள் GCP நேட்டிவ் மார்டனைசேஷன், டேட்டா இன்ஜினியரிங், செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் நீண்ட காலம் அனுபவம் கொண்டுள்ளனர்.

இந்த புதிய படையை வைத்து என்டிடி டேட்டா இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட டேட்டா மற்றும் ஏஐ சேவை அளிக்கப்பட உள்ளது. இந்த கையகப்படுத்துதல் குறிப்பாக முக்கியமானது, ஏனெனில் கர்நாடக மாநிலத்தின் சிறிய நகரங்களில் ஒன்றான உடுப்பியில் இருந்து இந்த நிறுவனம் கைப்பற்றப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநில அரசு பெங்களூரை தாண்டி பிற நகரங்களை தொழில்நுட்ப மையமாக மாற்றி வரும் முயற்சியில் தீவிரமாக இருக்கும் வேளையில், என்டிடி டேட்டாவின் இந்த கைப்பற்றல் மிகப்பெரிய முன்னேற்றத்தை காட்டுகிறது. இதேபோல் மைசூர், மங்களூர் ஆகிய நகரங்களையும் ஐடி நகரமாக மாற்றி வரும் முயற்சியில் உள்ளது.

சிறிய நகரங்களில் இருக்கும் நிறுவனங்களை உலகளாவிய பெரிய நிறுவனங்கள் கைப்பற்றும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. ஜப்பான் நாட்டு நிறுவனமான இதற்கு முன்பே உடுப்பி நகரத்தை தேர்ந்த் ஒரு நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது.

2021 இல் டெக்னோப்ரோ ஹோல்டிங்ஸ், ரோபோசாஃப்ட் டெக்னாலஜிஸ் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, நைவஸ் சொல்யூஷன்ஸ் ஜப்பானிய தொழில்நுட்ப நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட இரண்டாவது உடுப்பி-அடிப்படையிலான நிறுவனமாகிறது.

கிளவுட் சேவிகளுக்கான உலகளாவிய தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, Gartner கணிப்பின்படி, பப்ளிக் கிளவுட் சேவைகளுக்கான சந்தை 2024 இல் 679 பில்லியன் டாலரை எட்டும் மற்றும் 2027 ஆம் ஆண்டில் 1 டிரில்லியன் டாலரை தாண்டும் என கணிக்கப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+