ஜப்பான் உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு என்று பெருமை கொண்டு இருந்தாலும் இந்த நாட்டை 15 வருடமாக ஒரு பிரச்சனை துரத்தி வருகிறது, ஆனால் இதற்கு இன்னும் தீர்வு காணப்படாமல் இருப்பது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இரண்டு அணுகுண்டுகள் பாதிப்பைக் கடந்து உலகளவில் முன்னணி பொருளாதார நாடாக இருக்கும் ஜப்பான் நாட்டை மக்கள்தொகை பிரச்சனை பெரிதும் வட்டி வதைத்து வருகிறது.
ஜப்பானின் மக்கள் தொகை தொடர்ச்சியாக 15-வது ஆண்டாகக் குறைந்துள்ளதாகப் புதன்கிழமை வெளியான அந்நாட்டு அரசாங்க தரவுகள் கூறுகிறது. ஜப்பான் நாட்டின் மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் முதியவர்களாக மாறி வரும் அதேநேரத்தில் அந்நாட்டில் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கும் காரணத்தால், ஜப்பான் மக்கள் தொகை கடந்த ஆண்டை காட்டிலும் 5 லட்சத்துக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜப்பானில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 7,30,000 ஆக சரிந்தது, இது வரலாற்றுச் சரிவாகும். இதேபோல் கடந்த ஆண்டு 15.8 லட்சம் பேர் இறந்துள்ளனர், இதுவும் வரலாற்றில் அதிகமாகும். ஜனவரி 1 நிலவரப்படி ஜப்பானின் மக்கள் தொகை 124.9 மில்லியனாக உள்ளது. மக்கள் தொகை குறைவது என்பது ஜப்பான் போன்ற பெரிய பொருளாதார நாடுகளுக்கு மிகப்பெரிய பிரச்சனை.
ஜப்பான் நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, வெளிநாட்டிலிருந்து குடியேறிய மக்களின் எண்ணிக்கை 11% அதிகரித்துள்ளதால், இப்பிரிவின் மக்கள் தொகை முதல் முறையாக 3 மில்லியனைத் தாண்டியுள்ளது. இதன் மூலம் ஜப்பானில் மொத்த மக்கள் தொகையில் வெளிநாட்டவர்கள் கிட்டத்தட்ட 3% ஆக உள்ளனர் மற்றும் பெரும்பாலும் 15 முதல் 64 வயது வரையிலான வேலை வாய்ப்புள்ளவர்களாக உள்ளனர்.
ஜப்பான் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் வரலாற்று அளவில் குறைய முக்கியமான காரணம், இளம் ஜப்பானியர்கள் மத்தியில் திருமணம் செய்து கொள்ளவோ அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளவோ தயங்கும் போக்கு அதிகரித்து வருகிறது, இதுதான் தற்போது மக்கள் தொகை எண்ணிக்கையில் எதிரொலிக்கிறது.
ஜப்பான் இளைஞர்களின் இந்த மனநிலைக்கு முக்கிய காரணம், குறைவான வேலைவாய்ப்பு, செலவுகள் அதிகரிப்பு, சம்பளத்தை விட வேகமாக உயரும் வாழ்க்கைச் செலவுகள், கார்ப்ரேட் நிறுவனங்களில் பாலினபாகுபாடு ஆகியவை பெண்கள் மற்றும் வேலை செய்யும் தாய்மார்கள் மீது கடுமையான சுமையை ஏற்படுத்துகிறது. இதனால் பிள்ளைகளை பெற்றுக்கொண்டு அவர்களை வளர்ப்பது என்பது பெரும் சுமையாக மாறியுள்ளது.
இந்த நிலையை மாற்றவும், இளைஞர்களை அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஜப்பான் அரசு ஊக்குவிக்கும் வகையில், குழந்தை வளர்ப்பு மற்றும் கல்விக்கான மானியங்களை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 5.3 டிரில்லியன் யென் (34 பில்லியன் டாலர்) ஒதுக்கியுள்ளது. இதில் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு 3.6 டிரில்லியன் யென் (23 பில்லியன் டாலர்) வரி வருமானத்தை இத்திட்டத்தில் செலவிட உள்ளது.
ஜப்பான் அரசு குறித்து நிபுணர்கள் பேசுகையில், இந்த நடவடிக்கைகள் பெரும்பாலும் குழந்தை பெற திட்டமிடும் அல்லது ஏற்கனவே குழந்தை உள்ள திருமணமான தம்பதிகளுக்காகவே செய்யப்படுகின்றன, திருமணம் செய்ய தயங்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பற்றி ஜப்பான் அரசு கவலைப்படுவதில்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த 15 ஆண்டு மக்கள் தொகை சூழ்நிலை தொடர்ந்தால் 2070 ஆம் ஆண்டளவில் ஜப்பானின் மக்கள் தொகை சுமார் 30% குறைந்து 87 மில்லியனாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது 10 பேரில் நான்கு பேர் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என ஆய்வுகள் கூறுகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications