இந்திய ரீடைல் நிதியியல் சேவை பிரிவில் இருக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான புல்லர்டன் இந்தியா கிரெடிட் நிறுவனத்தின் 74.9 சதவீத பங்குகளைக் கைப்பற்ற ஜப்பான் நாட்டின் 2வது பெரும் நிதி நிறுவனமான சுமிடோமோ மிட்சுயி பைனான்சியல் குரூப் கைப்பற்ற முன்வந்துள்ளது.
இந்திய நிதியியல் சந்தையில் வாராக் கடன் மூலம் பல நிதி நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இத்துறையில் அதிகளவிலான முதலீட்டை திரட்ட, வெளிநாட்டு நிறுவன முதலீடுகள் குவிந்து வருகிறது.
புல்லர்டன் இந்தியா கிரெடிட்
புல்லர்டன் இந்தியா கிரெடிட் நிறுவனத்தின் 74.9 சதவீத பங்குகளைக் கைப்பற்ற சுமிடோமோ மிட்சுயி பைனான்சியல் குரூப் சுமார் 2 பில்லியன் டாலர் அதாவது இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டதட்ட 15,000 கோடி ரூபாய்.
சுமிடோமோ மிட்சுயி பைனான்சியல் குரூப்
இதுகுறித்து சுமிடோமோ மிட்சுயி பைனான்சியல் குரூபின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகியான ஜுன் ஹோடா கூறுகையில், நாங்கள் முக்கியமான 4 நாடுகளைத் தேர்வு செய்துள்ளோம், இதில் இந்தியா மிக முக்கியமானது. இந்தியாவில் எங்களின் வர்த்தக வளர்ச்சி மிகவும் சிறப்பாகவும், இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
முழுமையாகக் கைப்பற்றல்
முதற்கட்டமாகப் புல்லர்டன் இந்தியா கிரெடிட் நிறுவனத்தின் 74.9 சதவீத பங்குகளைக் கைப்பற்ற சுமிடோமோ மிட்சுயி பைனான்சியல் குரூப் விரைவில் 100 சதவீத பங்குகளைக் கைப்பற்றவும் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
சிங்கப்பூர் Temasek
தற்போது இந்திய வர்த்தகத்தை முழுமையாகப் புல்லர்டன் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் தான் முழுமையாக நிர்வாகம் செய்கிறது. இது சிங்கப்பூர் நாட்டின் அரசு முதலீட்டு நிறுவனமான Temasek Holdings Pte நிறுவனத்தின் 100% சதவீத பங்குகளைக் கொண்ட ஒரு கிளை நிறுவனமாகும்.
நஷ்ட அளவீடு
2021ஆம் ஆண்டில் புல்லர்டன் இந்தியா கிரெடிட் நிறுவனத்தின் வருவாய் 5,270 கோடி ரூபாயாக உள்ள நிலையில், இந்நிறுவனத்தின் நஷ்ட அளவீடு 1,213 கோடி ரூபாயாக உள்ளது. இந்நிலையில் ஜப்பான் நாட்டின் 2வது பெரும் நிதி நிறுவனமான சுமிடோமோ மிட்சுயி பைனான்சியல் குரூபின் கைப்பற்றல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications