உலகளவில் இண்டர்நெட் வேகம் கடந்த 10 வருடத்தில் பெரிய அளவில் அதிகரித்திருக்கும் வேளையில், ஒவ்வொரு நாடும் அடுத்தகட்ட சேவை மேம்பாடுக்கு தயாராகி வருகிறது. இந்தியாவில் இன்னும் முழுமையாக 5ஜி சேவை மக்கள் மத்தியில் பயன்பாட்டுக்கு வராத நிலையில் ஜப்பான் நாட்டில் 6ஜி சேவை சோதனை செய்யப்பட்டு உள்ளது.
எதிர்காலத்தின் அதிவேக இணையதள தொழில்நுட்பமான 6G சேவையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டுத் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு, உலகின் முதல் 6G கருவியை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது ஒரு வினாடிக்கு 100 கிகாபிட் (Gbps) வேகத்தில் தரவை அனுப்பும் திறன் கொண்டது, மேலும் 300 மீட்டர் தூரத்தைக் கடக்கிறது. இது தற்போதைய 5G தொழில்நுட்பத்தை விட 20 மடங்கு வேகமானது.
ஜப்பான் நாட்டின் டெலிகாம் நிறுவனங்களான டோகோமோ, என்டிடி கார்ப்பரேஷன், என்ஈசி கார்ப்பரேஷன் மற்றும் ஃபுஜித்சு போன்ற நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் இந்த 6ஜி கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 11 ஆம் தேதி இந்த கூட்டமைப்பு வெற்றிகரமான சோதனை முடிவுகளை அறிவித்தது. அதில், 100 கிகா ஹெர்ட்ஸ் (GHz) அலைக்கற்றை பயன்படுத்தி வீட்டிற்குள் மற்றும் 300 GHz அலைக்கற்றை பயன்படுத்தி வெளிப்புறத்தில் 100 Gbps வேகத்தில் டேட்டா பகிரப்பட்டு உள்ளது. இந்த சோதனைகள் 100 மீட்டர் தூரத்தில் நடத்தப்பட்டன.
6ஜி சேவையில் டேட்டா டிரான்ஸ்பர் வேகங்கள் ஈர்க்கக்கூடியவை என்றாலும், உடனே துள்ளி குதிக்க வேண்டாம். இந்த 6G சேவையை தற்போது ஒரு கருவியில் இருந்து மற்றொரு கருவிக்கு எவ்விதமான இடர்பாடும் இல்லாத அலைக்கற்றையைப் பயன்படுத்திச் சோதிக்கப்பட்டது,
வணிக ரீதியாக டெலிகாம் நெட்வொர்க்-ல் இதேவேகம் கட்டாயம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதாலேயே இந்த விஷயத்தை கொண்டாட வேண்டாம் என கூறப்படுகிறது. 5ஜி மட்டும் அல்லாமல் 6ஜி சேவையில் டேட்டா டிரான்ஸ்பர் வேகம் பாதிக்கும் குறைபாடுகள் உள்ளன.
தற்போதைய இண்டர்நெட் சேவையில் கோல்டு ரேட்டிங் பெற்று இருக்கும் 5G சேவை அதிகப்படியாக 10 Gbps வேகத்தை வழங்குகிறது. ஆனால் நிஜ உலக சேவையில் இதன் வேகம் அப்படியில்லை. உதாரணமாக அமெரிக்காவில் T-Mobile பயன்படுத்தும் 5ஜி சேவையின் சராசரி வேகம் சுமார் 200 Mbps மட்டுமே.
இவ்வளவு குறைந்த வேகத்திற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று, 5G பயன்படுத்தும் உயர் அலைக்கற்றை பேன்ட் தான். உயர் அலைக்கற்றை பேன்ட் வேகத்தைக் கொடுத்தும், சிக்னல் பயணம் செய்யும் தூரத்தை பொருத்து இந்த வேகம் பாதிக்கப்படும்.
எதிர்காலத்தின் அதிவேக இணையதள அனுபவத்திற்கு 6G வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் வர்த்தக ரீதியாக இதைப் பயன்படுத்த இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications