சமுக வலைதளம் மக்கள் மத்தியில் தற்போது அதிகளவிலான ஆதிக்கம் செலுத்துவது எல்லோருக்கும் தெரியும், அதை ஆபத்து எனப் பலர் கூறிவரும் நிலையில், பல கோடி மக்கள் சமுக வலைத்தளம் மூலம் அதிகளவிலான பணத்தைச் சம்பாதித்து வருகின்றனர். எது எப்படியிருந்தாலும் அளவோடு இருந்தால் எல்லோருக்கும் நல்லது. சரி நாம விஷயத்திற்கு வருவோம், ஜப்பான் நாட்டில் ஒரு பெரும் பணக்காரர் தனது டிவிட்டர் பாலோயர்களுக்கு 1 மில்லியன் யென் அதாவது 64.36 கோடி ரூபாய் பணத்தைப் பரிசாக அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
அடிசக்க இப்படியொரு வாய்ப்பு நமக்குக் கிடைக்காம போயிடுச்சே.
யுசாகு
ஜப்பான் நாட்டின் பணக்காரர் யுசாகு மீசாவா என்பவர் மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கி தனது டிவிட்டர் கணக்கில் தன்னைப் பாலோ செய்பவர்களுக்கு 1 மில்லியன் யென் அதாவது 9 மில்லியன் டாலர் அல்லது 64.36 கோடி ரூபாய் மதிப்பிலான தொகையைப் பரிசாக அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்
6.8 மில்லியன் பாலோயர்கள்
Yusaku Maezawa-வின் டிவிட்டர் கணக்கில் சுமார் 6.8 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். இவர்களைக் குஷிப்படுத்தும் நோக்கில் தனது புத்தாண்டு டிவீட்டை ரீடிவீட் செய்பவர்களில் 1000 பேரைத் தேர்வு செய்து 1 மில்லியன் யென் தொகையைப் பிரித்துக் கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதை ஒரு Social expreiment எனவும் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார் யுசாகு.
அடிப்படை சம்பளம்
அதுமட்டும் அல்லாமல் Yusaku Maezawa தனது டிவிட்டரில் அடிப்படை சம்பளம் அதாவது Basic Income என்பதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தி அதன் அடிப்படையிலேயே இந்தப் பிரிசு திட்டத்தை அறிவித்துள்ளார்.
அமெரிக்கா
அமெரிக்கா
எலான் மஸ்க்
சமீப காலமாக ஜப்பான் மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் இவர் பெரிய அளவில் பிரபலமாகி வருகிறார். இதற்கு முக்கியக் காரணம் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்-இன் மற்றொரு நிறுவனமான எஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிலவுக்குச் செல்லும் திட்டத்தில் முதல் ஆளாகத் தேர்வாகியுள்ளார் Yusaku Maezawa. இந்தச் செய்தி வெளியான நாளில் இருந்து இவரின் புகழ் உலகம் முழுவதும் பரவியது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் நிலா பயணம் வருகிற 2023ஆம் ஆம் ஆண்டு நடக்க உள்ளதாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications