பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ஜப்பானை சேர்ந்த நிறுவனங்கள் கர்நாடகாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது.
கர்நாடகா அரசு InvestKarnataka என்ற பெயரில் மூன்று நாட்கள் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதிய தொழில் கொள்கையையும் கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ஜப்பானை சேர்ந்த நிறுவனங்கள் கர்நாடகாவில் முதலீடு செய்வதற்காக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளன. ஜப்பானில் செயல்படக்கூடிய சுமார் 15 நிறுவனங்கள் கர்நாடக மாநிலத்தில் 7500 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமேஷன் உள்ளிட பல்வேறு துறைகளில் இந்த முதலீடுகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டொயோட்டா கிர்லோஷ்கர் (Toyota Kirloskar Motor Private Limited ) நிறுவனம் கர்நாடகாவில் 3748 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. என்ஐடீஇசி இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் ( NIDEC Industrial Automation ) நிறுவனம் 600 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
அதேபோல ஏஎஸ்எம் டெக்னாலஜிஸ் நிறுவனம் 510 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த முதலீட்டாளர் மாநாட்டினை பொறுத்தவரை பெங்களூர் மட்டும் இல்லாமல் பெங்களூருவை சுற்றி இருக்கும் பகுதிகள் மற்றும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் முதலீடுகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலம் விஜயபுரா நகரில் முதலீடு செய்வதற்கு பல்வேறு நிறுவனங்கள் முன் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கர்நாடகா அரசு 2025 -2030 ஆம் ஆண்டுக்கான தொழில் கொள்கையை வெளியிட்டது. இதன்படி மாநிலத்தில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவித்தது. இந்த மூன்று நாட்கள் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும் கலந்து கொண்டுள்ளன. கர்நாடக மாநில அரசு பல்வேறு நிறுவனங்களோடு பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
ஜேஎஸ்டபிள்யூ குழுமம், டாடா , ரிவ்யூ பவர் , சஸ்லான், பல்டோடா ஸ்டீல் நிறுவனம் , மகேந்திரா குழுமம், ஹீரோ, டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, ஹோண்டா, ஷீண்டர் எலக்ட்ரிக், ஹிடாச்சி எனர்ஜி, டால்மியா சிமெண்ட், அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகிய நிறுவனங்களும் கர்நாடக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சிப் தயாரிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் அதிகபட்ச முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications