டெல்லி: ஜப்பானை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஷார்ப் (Sharp) இந்தியாவில் ஸ்மார்ட் கருவிகளுக்கான டிஸ்ப்ளே தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியாவில் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் செமி கண்டக்டர் திட்டத்தின் கீழ் இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் கூட்டமைப்பு செய்து ஷார்ப் நிறுவனம் டிஸ்ப்ளே தயாரிக்கும் ஆலையை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு இந்திய நிறுவனங்களுடன் ஷார்ப் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சில நிறுவனங்கள் ஷார்ப் நிறுவனத்திற்கு பாசிட்டிவான பதிலை தந்திருப்பதாகவும் கூடிய விரைவில் ஷார்ப் நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடும் என்றும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே சீனா , கொரியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்களோடு இணைந்து ஷார்ப் நிறுவனம் ஸ்மார்ட் கருவிகளுக்கான டிஸ்ப்ளே தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவிலும் இதே போன்று ஒரு நடைமுறையில் தங்களுடைய நிறுவனத்தை அமைப்பதற்கு இது முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான டிஸ்ப்ளேக்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது என சொல்லப்படுகிறது. இதற்காக இந்த நிறுவனம் இந்தியாவில் 3 முதல் 5 பில்லியன் டாலர்கள் வரை முதலீடு செய்யலாம் என கூறப்படுகிறது.
இந்த நிறுவனம் அண்மை காலமாக கடனில் சிக்கியுள்ளது. இந்த கடனிலிருந்து மீண்டு வருவதற்காக தங்களுடைய தொழிலை விரிவு படுத்துவதற்கு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தான் இந்திய சந்தையில் கவனம் செலுத்தி வருகிறது. இதன்படி ஷார்ப் நிறுவனம் இந்தியாவில் பெரிய அளவிலான டிஸ்ப்ளேக்களை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் மத்திய அரசின் நிதி உதவியை பெற முடியும் என்பதோடு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும்.
பெரிய அளவிலான எல்சிடி டிஸ்பிளேக்களை தயாரித்து வழங்கிய முதல் நிறுவனம் ஜப்பானை சேர்ந்த ஷார்ப் நிறுவனம் தான். ஆனால் பின்னாளில் சீன நிறுவனங்கள் ஷார்ப்பை பின்னுக்கு தள்ளி சந்தையில் முன்னேறி விட்டன. எனவே மீண்டும் இந்த சந்தையை பிடிக்கும் நோக்கில் ஷார்ப் நிறுவனம் தன்னுடைய கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பி உள்ளது.
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களை தயாரித்து வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் இதற்கு முன்பு ஷார்ப் நிறுவனத்துடன் இணைந்து தொழில் செய்தது. தற்போது ஃபாக்ஸ்கான் இந்தியாவில் ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், ஷார்ப் நிறுவனமும் இந்தியா வந்தால் இவ்விரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது.
Written by: Devika
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications