புதுச்சேரியில் நடைபெற்ற கருத்தரங்கில் மிட்சுபிஷி நிறுவனத்தின் 77 வயதான அதிகாரி ஒருவர் கலந்து கொண்டு, நடிகர் ரஜினிகாந்தின் முத்து படப் பாடலை பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு வணிகத்துறை சார்பில் மூன்று நாட்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதன் சிறப்பு அமர்வில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 77 வயதான குபிக்கீ சென் பங்கேற்றார்.

இவர், மிட்சுபிஷி நிறுவனத்தில் இணைப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஜப்பான் – இந்தியா இடையிலான வர்த்தகச் சூழல் குறித்து ஆங்கிலத்தில் உரையாற்றிய அவர் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்தார்.
இந்த கலந்துரையாடலின் இறுதியில் தனக்கு தமிழ் மொழி மிகவும் பிடித்த மொழி என்றார். தமிழ் மொழியை நன்றாக புரிந்து கொள்வேன் என்றும் தமிழ் சினிமா பாடல்களை கூட பாடுவேன் என்றும் தெரிவித்தார்.
ஒருவன் ஒருவன் முதலாளி பாடல்: நடிகர் ரஜினிகாந்த் நடித்த முத்து படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை பாடி அசத்தினார். மாணவர்களும், சக பார்வையாளர்களும் அவரை உற்சாகமூட்டினர். அவர் ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை பாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தமிழ் திரைப்படங்களில் ஆர்வம்: ஜப்பானியர்களுக்கு பொதுவாகவே தமிழ்ப் படங்கள் மீது ஆர்வம் அதிகம். குறிப்பாக ரஜினிகாந்த் படங்களுக்கு அங்கே தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ்நாட்டை போலவே ஜப்பானில் உள்ள ரசிகர்கள் ரஜினிகாந்த் திரைப்படம் வெளியாகும் போது பெரிய அளவில் கொண்டாடுகின்றனர். சில ரசிகர்கள் சென்னைக்கு வருகை தந்து முதல் காட்சியை கண்டு ரசிப்பார்கள்.
23.5 கோடி ரூபாய் வசூல்: 1995ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் முத்து திரைப்படம், ஜப்பான் நாட்டில் ஜப்பானிய மொழியில் வெளியிடப்பட்டது. அப்போது முதலே முத்து படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவர் முதலாளி பாடல் ஜப்பான் நாட்டில் பிரபலம்.
ஜப்பானில் வெளியாகி அதிக வசூலை குவித்த திரைப்படமாக முத்து திரைப்படம் இருந்தது . அதாவது இந்திய மதிப்பில் 23.5 கோடி ரூபாயை வசூல் செய்தது. 2022ஆம் ஆண்டு ஆர்ஆர்ஆர் திரைப்படம் அந்த சாதனையை முறியடித்து 24 கோடி ரூபாயை வசூல் செய்தது.
இதே போல தமிழ்நாட்டுக்கும் மிட்சுபிஷி நிறுவனத்துக்கும் இடையிலும் நீண்ட கால உறவு இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மிட்சுபிஷி ஆலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
Story Written by: Devika
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications