40 ஆண்டு சரிவில் ஜப்பான் யென்.. இந்தியாவுக்குக் காத்திருக்கும் டைம் பாம்.. உண்மை என்ன..?

உலகளவில் வர்த்தக சந்தை தலைகீழாக மாறியிருக்கும் வேளையில், இன்று நாணய சந்தையில் முக்கிய நிகழ்வாகவும், அதேவேளையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஜப்பான் நாட்டின் நாணயமான யென் மதிப்பு டாலருக்கு எதிராக சுமார் 40 வருட குறைவான அளவை எட்டியுள்ளது.

இதன் மூலம் 1986ஆம் ஆண்டு பதிவான நிலையில் தற்போது ஜப்பான் யென் உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு எதிராக ஜப்பான் யென் மதிப்பு 162.19 ஆகப் பதிவாகியுள்ளது. இதனால் யென் மதிப்பின் சரிவைக் கட்டுப்படுத்த ஜப்பான் அரசும், மத்திய வங்கியும் அதிரடியான நடவடிக்கை எடுக்கும் எனச் சந்தையில் கருத்து நிலவுகிறது.

40 ஆண்டு சரிவில் ஜப்பான் யென்.. இந்தியாவுக்குக் காத்திருக்கும் டைம் பாம்.. உண்மை என்ன..?

இதை உறுதி செய்யும் வகையில் ஜப்பான் நாட்டின் நிதியமைச்சரான Satsuki Katayama, அரசு யென் பதிப்பின் சரிவைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையை எடுக்கும் எனச் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச பங்குச்சந்தையுடன் இந்தியச் சந்தையும் கூடுதல் எச்சரிக்கை உடன் உள்ளது.

ஜப்பான் அரசும் மத்திய வங்கியும் யென் மதிப்பைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தினால் முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றம் நடக்க வாய்ப்புள்ளது, இது இந்தியச் சந்தையை மறைமுகமாகப் பாதிக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் கூடுதல் அச்சத்துடன் உள்ளனர். சரி ஜப்பான் யென் சரிவால் இந்தியாவுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்..?

உண்மையில் ஜப்பான் யெனின் 40 ஆண்டுக்கால சரிவு மூலம் இந்தியாவுக்கு நன்மையும் உடன், பாதிப்பும் உண்டு.

பங்குச்சந்தையில் பெரும் பாதிப்பு:

பலருக்கும் யென் கேரி டிரேட் பற்றி தெரிந்திருக்கும். அதாவது யென் மதிப்பு குறைவாக இருப்பதாலும், ஜப்பான் நாட்டில் வட்டி குறைவாக இருப்பதாலும் ஜப்பான் மக்களும், வெளிநாட்டவர்களும் யென் நாணயத்தில் கடன் வாங்கி அதிக லாபம் தரும் அமெரிக்கா பங்குச்சந்தை, இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது வழக்கம்.

இத்தகைய சூழ்நிலையில் யென் மதிப்பைக் கட்டுப்படுத்த ஜப்பான் மத்திய வங்கி வட்டியை உயர்த்தினால் யென் நாணயத்தில் கடன் வாங்கி முதலீடு செய்தோருக்கான லாபம் குறையும். இதனால் பங்குச்சந்தையில் முதலீடுகளை விற்று யென் கடனை முதலீட்டாளர்கள் அடைப்பார்கள்.

இதனால் யென் மதிப்பு சரிவு பங்குச்சந்தையிலும், நாணய சந்தையிலும் பணப்புழக்க பாதிப்பை உருவாக்கும். இதனால் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை வெளியேற்றுவார்கள் இதன் இந்தியச் சந்தையை நேரடியாகச் சிறிய அளவில் மட்டுமே பாதிக்கும், ஆனால் மறைமுக அதாவது அமெரிக்க, பிரிட்டன் சந்தையின் மூலம் ஏற்படும் பாதிப்பு மூலம் இந்தியச் சந்தையிலிருந்து அதிகப்படியான முதலீடுகளை FII வெளியேற வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இதுதான் இந்தியச் சந்தைக்கு டைம் பாம், ஜப்பான் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் வரையில் இந்த டைம் பாம் காத்திருக்கும், வட்டியை உயர்த்திய உடன் இது முதலீடுகள் வெளியேறத் துவங்கும்.

இறக்குமதி சந்தைக்கு ஜாக்பாட்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜப்பான் தயாரிப்பு பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் காரணத்தால், யென் மதிப்பு குறைந்தது இந்திய இறக்குமதியாளர்களுக்கு ஜாக்பாட் ஆக மாறுகிறது. குறிப்பாக EV மற்றும் ஹைப்ரிட் வாகனங்களை அதிகளவில் தயாரிக்கும் மாருதி சுசூகி நிறுவனத்திற்குச் சாதகமாக அமையும், இப்பிரிவின் பெரும்பாலான பொருட்கள் ஜப்பானில் இருந்து தான் வருகிறது.

இதுமட்டும் அல்லாமல் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உதிரிப்பாகங்கள், சிறப்பு ஸ்டீல் ஆகியவை தற்போது மலிவான விலைக்குக் கிடைக்கும்.

இறுதியாக ஜப்பான் நாட்டிற்குச் சுற்றுலா செல்ல திட்டமிடும் மக்களுக்கு குறைந்த செலவில் சென்று வருவதற்கான வாய்ப்புகள் யென் மதிப்பு சரிவால் ஏற்பட்டு உள்ளது. இதேபோல் ஜப்பானில் படிக்கும் மாணார்களுக்கும் இது சிறப்பான காலகட்டம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+