ஜப்பான் பொருளாதாரம் தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக ஜிடிபி வளர்ச்சியில் சரிவை எதிர்கொண்டு வரும் வேளையில் தற்போது ரெசிஷனுக்குள் மாட்டிக்கொண்டு உள்ளது. ஜப்பான் நாட்டில் உள்நாட்டுத் தேவையில் ஏற்பட்ட பெரிய அளவிலான சரிவு தான் இந்த மோசமான நிலைக்கு முக்கியக் காரணமாகும்.
ஜப்பான் பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் 3.3 சதவீதமாகக் குறைந்த வேளையில், டிசம்பர் காலாண்டில் 0.4 சதவீதமாகச் சரிந்துள்ளது. இதேவேளையில் ஜப்பான் யென் மதிப்பு ஒரு வாரத்திற்கு முன்பு 3 மாத சரிவை தொட்டது குறிப்பிடத்தக்கது. பொதுவாக 2 காலாண்டுகளாக ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவு பாதையில் இருந்தால் ரெசிஷன் எனக் கூறப்படும்.

இந்த ரெசிஷன் காரணமாக அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இருந்த ஜப்பான் தற்போது 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டு, ஜெர்மனி 3வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. ஜப்பான் பொருளாதாரம் ரெசிஷனுக்குள் நுழைந்தது மூலம் தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு..?
ஜப்பான் பொருளாதாரம் ரெசிஷனுக்குள்ள நுழைந்ததைத் தொடர்ந்து ஜப்பான் அரசும், அந்நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆப் ஜப்பான் நாணய புழக்க அளவீட்டைத் திருத்தி நாட்டில் டிமாண்ட்-ஐ அதிகரிக்க ஊக்குவிக்கும். ஏற்கனவே ஜப்பான் நாட்டின் ஏற்றுமதி வர்த்தகம் பாதித்துள்ள நிலையில், இந்த ரெசிஷன் மூலம் அந்நாட்டின் புதிய முதலீடுகளுக்குத் தற்காலிக முட்டுக்கட்டை விழும்.
ஜப்பான் இந்தியா மத்தியில் நீண்ட கால வர்த்தகம் மற்றும் நட்புறவு இருக்கும் காரணத்தால் பல துறையில் ஜப்பான் நாட்டின் முதலீடுகள் உள்ளது. இந்த வகையில் இந்தியாவில் மாருதி சுசூகி, டோயோட்டா, UNIQLO, மிட்சுபிஷி, மீட்சூயி, ஹோண்டா, MIZUHO, ஹிட்டாசி, சோனி, பேனசோனிக் ஆகியவை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது.
ஜனவரி மாதம் சுசூகி மோட்டார்ஸ் இந்தியாவில் சுமார் 35000 கோடி ரூபாய் முதலீட்டில் 2வது தொழிற்சாலையை குஜராத்தில் அமைக்கும் திட்டத்தை அறிவித்தது. இந்த முதலீடுகள் ரெசிஷன் காரணமாகத் தாமதமாகலாம், இதன் எதிரொலியாக இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு வளர்ச்சி வேகம் கணிசமாகப் பாதிக்கப்படக் கூடும். இப்படிப் பல முதலீடுகள் தமிழ்நாட்டிலும் ஜப்பான் நிறுவனங்கள் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் ஜப்பான் நாட்டின் மிட்சுபிஷி-யின் துணை நிறுவனமான மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை அருகில் உள்ள கும்மிடிப்பூண்டி, பெருவயல் என்னும் கிராமத்தில், ரூம் ஏர் கண்டிஷனர் மற்றும் கம்ப்ரஸர் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. இப்புதிய தொழிற்சாலைக்காக சுமார் 1,891 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக 2023 மே மாதம் அறிவித்தது. இதன் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
ஜப்பான் நாட்டின் முன்னணி மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனமான Omron தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தனது முதல் இந்திய தொழிற்சாலையைச் சுமார் 130 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்க உள்ளதாக கடந்த வருடம் மே மாதம் அறிவித்தது.
இதேபோல் ஜப்பான் நாட்டின் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனம் சென்னையில் தனது முதல் Inflator தொழிற்சாலையைத் துவங்கி விரிவாக்கம் செய்ய உள்ளது.
மேலும் Daikin அடுத்த 3 வருடத்தில் இந்தியாவில் தனது வர்த்தகத்தை 2 மடங்கு உயர்த்த உள்ளதாக அறிவித்தது. தற்போது ஏற்பட்டு உள்ள ரெசிஷன் காரணமாக இதன் செயல்பாடுகள் கட்டாயம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் ரெசிஷனுக்குள் நுழைந்த பின்பு அதன் சர்வதேச முதலீடுகள் குறைந்தது மட்டும் அல்லாமல், அந்நாட்டில் இருக்கும் பல நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஜப்பான் நாட்டில் கணிசமான இந்தியர்கள் பல்வேறு துறை சார்ந்த பணியில் உள்ளனர் என்பதும் கவனிக்க வேண்டியது.
தற்போது சர்வதேச அளவில் பல நாடுகளில் மந்தமான பொருளாதாரச் சூழ்நிலை இருக்கும் காரணத்தால் முதலீட்டு சந்தை மொத்தமாகவே பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஜப்பான் ரெசிஷன் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.
ஜப்பான் நாட்டின் முதலீட்டு வரலாற்றையும், கடந்த ஒரு வருடத்தில் அறிவித்த முதலீட்டு மற்றும் விரிவாக்கத் திட்டங்களைப் பார்க்கும் போது ஆட்டோமொபைல் துறை முதலீடுகளும், உற்பத்தித் துறையும் அதிகமாகப் பாதிக்கப்படும். ஆனால் இந்த மந்த நிலை தற்காலிகமானது தான், இதேபோல் அடுத்த காலாண்டிலேயே ஜப்பான் ரெசிஷனில் இருந்து மீண்டு வர அதிக வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications