பெரும்பாலான நடுத்தர மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களால் ஒரு கட்டத்திற்கு மட்டுமே உயர முடியும் என்ற முடிவுக்கு வந்துவிடுவதால் அவர்களால் பெரிய அளவில் முன்னேற முடியவில்லை. 10 அடி நடந்தவர், 11 வது அடி நடந்தால் வாழ்க்கையே மாறிவிடும் என்பதற்கு ஜெய் சௌத்ரி முக்கியமான உதாரணம்.
யார் இந்த ஜெய் சௌத்ரி..? எப்படி 74000 கோடி ரூபாய் சம்பாதித்தார்..? பசி நமக்கு நிதர்சனத்தை கற்றுக்கொடுக்கும், ஏழ்மை பார்க்கும் அனைத்தையும் வாய்ப்பாக மாற்றும் திறன் கொடுக்கும், இவரை இரண்டையும் கல்வி உடன் இணைத்தால் வாழ்வில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும்.

இதற்கு சரியான உதாரணம் தான் ஜெய் சௌத்ரி. இந்திய அமெரிக்கராக இருக்கும் ஜெய் சௌத்ரி Zscaler என்ற கிளவுட் செக்யூரிட்டி நிறுவனத்தை உருவாக்கி சுமார் 74000 கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனத்திற்கு சிஇஓ-வாக உள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயிகளின் குடும்பத்தில் பிறந்தவர் ஜெய் சௌத்ரி. இவருடைய வீட்டில் மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வளர்ந்தவர். வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையில் மரத்தடியில் படித்து வந்தார்.
எழ்மையில் தவிப்பவருக்கு படிப்பு கைகொடுக்கும் என்பதற்கு ஏற்ப ஜெய் சௌத்ரி வாரனாசி ஐஐடி கல்லூரியில் கம்பியூட்டர் இன்ஜினியரிங் பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றார். பின்பு அமெரிக்காவின் சின்சினாட்டி பல்கலைகழகத்தில் இன்டர்ஸ்ட்ரியல்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் முதுகலை பட்டம் மற்றும் எம்பிஏ பட்டம் பெற்றார்.
படிப்பை முடித்த கையோடு ஜெய் சௌத்ரி அடுத்தடுத்து நிறுவனங்களை துவங்கி பெரிய விலைக்கு முன்னணி நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வெளியேறினார். இதனால் குறுகிய காலத்திலேயே அதிகப்படியான அனுபவம், கனெக்ஷன், பணத்தை சம்பாதித்தார்.
1996ல் படிப்பை முடித்த உடன் SecureIT நிறுவனத்தை உருவாக்கினார், பின்னர் அதை Verisign விற்பனை செய்தார். இதை தொடர்ந்து CipherTrust நிறுவனத்தை உருவாக்கினார், பின்னர் அதை Secure Computing Corporation-க்கு விற்பனை செய்தார். பின்னர் AirDefense நிறுவனத்தை உருவாக்கினார், பின்னர் அதை Motorola-வுக்கு விற்பனை செய்தார். இதன் பின் CoreHarbor என்னும் நிறுவனத்தை உருவாக்கினார், பின்னர் அதை AT&T-க்கு விற்பனை செய்தார்.
இப்படி தொடர்ந்து சென்றுக் கொண்டு இருக்க அடுத்து 2007ல் Zscaler என்ற கிளவுட் செக்யூரிட்டி நிறுவனத்தை உருவாக்கி 2018ல் அமெரிக்காவில் ஐபிஓ வெளியிட்டு இன்று சுமார் 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அசத்துகிறார். அக்டோபர் 2021ல் இவருடைய சொத்து மதிப்பு 16.3 பில்லியன் டாலராக இருந்து குறிப்பிடத்தக்கது.
ஜெய் சௌத்ரி, ஜோதி என்பவரை திருமணம் செய்துக்கொண்டு அமெரிக்காவின் நவாடா பகுதியின் Reno பகுதியில் 3 பிள்ளைகள் உடன் வசித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications