மின்சார வசதியே இல்லாத கிராமத்தில் படித்து தற்போது 91,300 கோடிக்கு சொந்தக்காரரான ஜெய்..!

கல்வி - இந்த ஒரு செல்வமே நமக்கு தேவையான அனைத்து செல்வத்தையும் கொண்டு வந்து சேர்த்துவிடும். அதற்கு முன் உதாரணமானவர் தான் ஜெய் சௌத்ரி. இந்தியாவில் மின்சார வசதி , சாலை வசதி கூட இல்லாத கிராமத்தில் வளர்ந்தவர் பயின்று தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கார்.

ஜெய்சௌத்ரி ஹிமாச்சல பிரதேச மாநிலம் உனா மாவட்டத்தில் உள்ள பானோ என்ற குக் கிராமத்தில் பிறந்தவர். அடிப்படை வசதிகளான மின்சாரம், குடிநீர் உள்ளிட்டவை கூட கிடைக்காமல் வளர்ந்தவர்.

மின்சார வசதியே இல்லாத கிராமத்தில் படித்து தற்போது 91,300 கோடிக்கு சொந்தக்காரரான ஜெய்..!

ஜெய் சவுத்ரியின் பெற்றோர் விவசாயிகள். இவர்களுக்கு மூன்று மகன்கள், அதில் இளையவர்தான் ஜெய் சௌத்ரி. இவர் பள்ளிக்கு நான்கு கிலோ மீட்டர் தினமும் நடந்து சென்று வருவாராம், மின்சாரம் இல்லாததன் காரணமாக மரத்தடியில் அமர்ந்து தான் இவர் பள்ளிப் பாடங்களை முடிப்பாராம்.

ஐஐடி பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் பிடெக் பயின்றார். 1980 ஆம் ஆண்டு அதாவது தன்னுடைய 22 ஆவது வயதில் அமெரிக்காவிற்கு சென்றார். அப்பொழுது தான் அவர் முதன்முறையாக விமானத்திலேயே பயணம் செய்தாராம். அங்கே இண்டஸ்ட்ரியல், இன்ஜினியரிங் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மற்றும் மார்க்கெட்டிங் துறைகளில் மேல் படிப்புகளை முடித்தார்.

ஐபிஎம் நிறுவனத்தில் தன்னுடைய வேலையை தொடங்கிய அவர் பின்னாளில் ஐந்து சாஃப்ட்வேர் ஸ்டார்ட் அப்களை நிறுவினார். 1996 ஆம் ஆண்டு இவரும் இவரது மனைவியும் செக்யூர்ஐடி(SecureIT) என்ற நிறுவனத்தை தொடங்கினர். இதனை பின்னர் பெரிய நிறுவனத்திற்கு அதனை விற்பனை செய்துவிட்டு 2000 ஆம் ஆண்டில் CipherTrust என்று மற்றொரு நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் ஒரு ஈகாமர்ஸ் தளமான CoreHarbor-யும் நிறுவினார்.

2002ஆம் ஆண்டில் AirDefense என்று நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் கிளவுட் செக்யூரிட்டி நிறுவனமான Zscaler-ஐ 2007 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை நடத்தி வருகிறார்.

புதிதாக தொழில் தொடங்கி வெற்றி பெற வேண்டும் என விரும்புபவர்களுக்கு இவர் கூறக்கூடிய ஒரே அறிவுரை "வேறு ஒருவரிடம் பணத்தை வாங்கி நீங்கள் அதில் தொழில் செய்வதை விட உங்களது சொந்த பணத்தில் செய்யக்கூடிய தொழில் தான் உங்களை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு செல்லும். அந்த தொழிலை நீங்கம் அணுகும் முறையே மாறுபட்டிருக்கும்" என்கிறார். இவர் பல்வேறு விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.

தற்போது உலக அளவில் பிரபலமான ஒரு தொழில் முனைவோராக ஜெய் சௌத்ரி இருந்து வருகிறார் . இவர் தொடங்கிய எல்லா நிறுவனமும் வெற்றி தான். 2018 ஆம் ஆண்டு இவரது Zscaler நிறுவனம் நியூயார்க் பங்குச்சந்தை நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்டது.

நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புது புது நிறுவனங்களை நிறுவி அவற்றை வெற்றிகரமாக நடத்தும் திறன் கொண்டவர் தான் ஜெய் சௌத்ரி. தற்போது உலக பணக்காரர்களில் இவரும் ஒருவர். ப்ளூம்பெர்க் பில்லியனர் பட்டியலின் அடிப்படையில் ஜெய்சௌத்ரியின் சொத்து மதிப்பு 91,300 கோடி ரூபாய் ஆகும்.

ஐஐடி அலுமினிகளிலேயே பாரத் தேசாய் மற்றும் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி மற்றும் நந்தன் நீலகேணி ஆகியோருக்கு அடுத்ததாக மிகப்பெரிய அளவில் சொத்து மதிப்பு கொண்ட நபராக இவர் உருவாகி இருக்கிறார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+